'பிலிம் சிட்டி'யில் சித்து நுழைய தடை

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019 | கருத்துகள் (8)
Advertisement

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள, திரைப்பட நகரில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான, நவ்ஜோத் சிங் சித்து நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.





மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.




இதுகுறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலா துறை அமைச்சருமான, காங்கிரசைச் சேர்ந்த, நவ்ஜோத் சிங் சித்து, 'ஒரு சிலரின் பயங்கரவாத செயலுக்காக, ஒரு தனிப்பட்ட நாட்டின் மீது குற்றஞ்சாட்டக்கூடாது' என, பாகிஸ்தானுக்கு ஆதரவாக, சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.இதையடுத்து, தனியார், 'டிவி' நிகழ்ச்சியிலிருந்து, சித்து அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில், மும்பை திரைப்படநகரில் நுழைவதற்கும், சித்துவுக்கு, சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
28-பிப்-201914:29:50 IST Report Abuse
Murugan பொதுவாக சீக்கியர்கள் தாங்கள் இந்தியர்கள், நாட்டு பற்று,மத பற்று உள்ளவர்கள் என்ற வெறியுடனே இருப்பார்கள். இவர் இம்ரான் கானுக்காக பேசுகிறாரோ? இவரை அங்கு ஒரு அமைச்சராக அவர் நண்பனுடன் வாழட்டும் அனுப்பிவிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Pandi - Katumandu,நேபாளம்
23-பிப்-201910:06:57 IST Report Abuse
Pandi ஓஒ.. Eppo வெள்ளாடு கருப்பு ஆச்சு.
Rate this:
Share this comment
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
23-பிப்-201909:56:45 IST Report Abuse
Suman சித்து தொடர்ந்து பாகிஸ்தானை ஆதரித்து வருகிறார். விளம்பரத்துக்காகவா இல்லை தீவிரவாதிகள் தொடர்பு இருக்குமா என்று விசாரிக்க வேண்டும். சினிமா ஊழியர்கள் கூட்டமைப்புக்கு நன்றி. நல்ல நடவடிக்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X