தைலாபுரத்தில் விருந்து : இ.பி.எஸ்., பங்கேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தைலாபுரத்தில் விருந்து : இ.பி.எஸ்., பங்கேற்பு

Added : பிப் 23, 2019
Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில், பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் நேற்று இரவு ஏற்பாடு செய்திருந்த விருந்தில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.லோக்சபா தேர்தலையொட்டி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ள, பா.ம.க.,விற்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, முதல்வர் மற்றும் துணை முதல்வருக்காக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.இதற்காக நேற்று மாலை, 4:00 மணி முதல், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர், அன்புமணி உள்ளிட்ட, பா.ம.க., நிர்வாகிகள், முதல்வர், அமைச்சர்கள் வருகைக்காக காத்திருந்தனர்.இதற்கிடையே திண்டிவனத்தில், அ.தி.மு.க.,வினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, நிர்வாகிகளிடையே பேசிய பின், இந்த விருந்தில் பங்கேற்பதற்காக இரவு, 9:10 மணிக்கு முதல்வர், இ.பி.எஸ்., தைலாபுரம் வந்தார். அவரைத் தொடர்ந்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, சம்பத் உள்ளிட்டோர் சென்றனர்.முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோரை ராமதாஸ் வரவேற்றார். பின் நடந்த விருந்தில், சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.விருந்து முடிந்து இரவு, 10:25 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டனர்.எம்.பி., கார் தடுத்து நிறுத்தம்தைலாபுரம் தோட்டத்திற்குள் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கார்கள் சென்றதும் தொடர்ந்து சென்ற ராஜேந்திரன் எம்.பி., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் கார்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கேட் மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள் அங்கு, பாதுகாப்புக்கு நின்றிருந்த வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜ், எஸ்.பி., ஜெயக்குமார் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகளிடம் தைலாபுரம் தோட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.முதல்வரின் பாதுகாப்பு படை போலீசார் மட்டுமே தைலாபுரம் தோட்டத்திற்குள் இருக்க அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் தோட்டத்திற்கு வெளியே காத்திருந்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X