அரசியல் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க.,வுடன் பேச்சு: பன்னீர் தகவல்

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (7)
Advertisement

மதுரை : மதுரை வந்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின், ''தே.மு.தி.க.,வுடன் கூட்டணி பேச்சு நடக்கிறது. நீங்கள் விரும்பிய கூட்டணி, விரைவில் அமையும்,'' என, பன்னீர்செல்வம் தெரிவித்தார்.மதுரையில் நேற்று நடந்த, பா.ஜ., தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில், அமித் ஷா பங்கேற்றார். பின், ராமநாதபுரத்திற்கு, ஹெலிகாப்டரில் செல்ல, விமான நிலையம் வந்தார்.விமான நிலைய விரிவாக்க பணி துவக்க விழாவில் பங்கேற்ற, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமித் ஷாவை சந்தித்து, 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.பின், அமித் ஷா, ராமநாதபுரம் புறப்பட்டு சென்றார். அங்கு நிகழ்ச்சியை முடித்து, மாலையில், மதுரை விமான நிலையம் வந்தார்.அதுவரை, விமான நிலையத்தில் காத்திருந்த பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் இணைந்து, மீண்டும் அமித் ஷாவை சந்தித்து, 20 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.பா.ஜ., மேலிட பொறுப்பாளர்கள் முரளி தரராவ், ரவி, மாநில தலைவர் தமிழிசை, தேசிய கயிறு வாரிய தலைவர், சி.பி.ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.பின், பா.ஜ., நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசித்த அமித் ஷா, பாலக்காடு செல்வதற்காக, தனி விமானத்தில் கோவை சென்றார்.சந்திப்பு குறித்து, பன்னீர்செல்வம் கூறுகையில், ''அமித் ஷாவுடன் நடந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமானது. கூட்டணிக்காக, தே.மு.தி.க.,வுடன் பேசி வருகிறோம். ஓரிரு நாளில், நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும்,'' என்றார்.சந்திப்பை தவிர்த்த வாசன்------அமித் ஷா ராமநாதபுரம் சென்றதும், மதுரை விமான நிலையத்தில், பன்னீர்செல்வம் காத்திருந்தார். அப்போது, சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்று, சென்னை செல்வதற்காக வந்தார், த.மா.கா., தலைவர் வாசன்.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற பேச்சு நடந்து வரும் நிலையில், பன்னீர்செல்வத்தை சந்திப்பதை தவிர்த்து, நேரடி யாக பயணியர் பகுதிக்கு சென்றார் வாசன். கூட்டணி குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதும், பேசுவதை தவிர்த்தார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mothibaba - Prayagraj,இந்தியா
23-பிப்-201915:54:16 IST Report Abuse
mothibaba பிஜேபி சற்று சிரமம் பார்க்காமல் மற்ற எல்லா திராவிட காட்சிகளையும் மெகா கூட்டனில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்ன என்ன நாற்பதும் நமக்கே.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
23-பிப்-201911:01:08 IST Report Abuse
pattikkaattaan "84 % மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும்" என்று கருத்து கணிப்பு வெளியிட்டுவிட்டு, பிறகு ஏன் இவர்கள் போய் தேய்ந்துபோன தேமுதிக விடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை .."பில்டிங்கு ஸ்ட்ராங் , பேஸ்மெண்ட் வீக்கு " என்ற வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-பிப்-201909:27:20 IST Report Abuse
Bhaskaran சிறு துரும்பும் பல்குத்த உதவும் கேப்டனை வளைத்துப் போட அரசரும் சுடாலினும் நேரில் போய் கரைக்க ஆரம்பித்துள்ளார்கள் அதிமுக உடனடியாக ஈகோ பார்க்காமல் கேப்டனிடம் பேரத்தை முடிப்பது நல்லது கூடவே சரத்குமார் பாரிவேந்தர் கிருஷ்ணசாமி எ.சி.ஷண்முகம் வாசன் ஆகியோரிடமும் dealing முடிக்கவும் வாக்கு சிதறலை தவிர்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X