விவசாய கடன் இலக்கு: கூட்டுறவுத்துறை திணறல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய கடன் இலக்கு: கூட்டுறவுத்துறை திணறல்

Added : பிப் 23, 2019
Advertisement

திருமங்கலம்: மதுரை மாவட்டத்தில் விவசாய கடன்கள் வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எட்ட முடியாமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன.நிர்வாகிகள் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் 162 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. நடப்பு நிதி ஆண்டுக்கு (2018--19) இச்சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு 160 கோடி ரூபாய் வட்டியில்லாத வேளாண் பயிர் கடனாக வழங்க வேண்டும். விவசாயிகள் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற சிட்டா, அடங்கல், வி.ஏ.ஓ., சான்று கொடுத்தால் போதும். மூன்று லட்சம் ரூபாய் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெறலாம். அதற்கு மேல் ஆவணங்களை அடமானம் வைக்க வேண்டும்.நடப்பு நிதி ஆண்டில் மழை குறைவால் விவசாயம் நடக்கும் பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 50 சதவீதம் மட்டுமே (80 கோடி ரூபாய்) கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் உள்ள காலங்களில் 10 முதல் 15 சதவீதம் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது. இலக்கினை இந்த நிதி ஆண்டு எட்டுவது இயலாத காரியம் என்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X