ராமர் கோவில் கட்டுவோம் : காங்கிரசும் வாக்குறுதி

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019 | கருத்துகள் (52)
Advertisement

டேராடூன் : பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அதன் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், ராமர் கோவில் கட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.


உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராவத் கூறியதாவது, அயோத்தி விவகாரம் தொடர்பாக, நான் தெளிவான கருத்தை கொண்டுள்ளேன். காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கும். என்னுடைய கருத்தை, கட்சி தலைமையும் ஏற்று கட்சியின் கருத்தாக அங்கீகரிக்கும்.

ராமர் கோவில் விவகாரத்தை, பா.ஜ. கட்சி, தேர்தல் சமயங்களில் மட்டும் கையிலெடுப்பது கண்டிக்கத்தக்கது.


மோடி மட்டுமல்ல :

புல்வாமா தாக்குதல் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடியை மட்டும் தேசிய நலன் கொண்டவராக வெளிக்காட்டிகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டின் நலன் சார்ந்த விவகாரத்தில், மோடி மட்டுமல்ல, நான் உட்பட நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தேசிய நலன் உடையவர்கள் தான். நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் பக்கபலமாக நம்நாட்டு மக்கள் இருப்பர்.


எந்த வளர்ச்சி முக்கியம் :

தற்போதைய பா.ஜ., ஆட்சி காலத்தில், இன்றியமையாத தேவையான விவசாயத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை ; ஆனால், அதற்கு மாறாக, புல்லட் ரயில் விவகாரத்தில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. ஆட்சியாளர்களுக்கு எந்த விஷயங்களில் வளர்ச்சி தேவை என்பது அறியாமல் உள்ளதாக ஹரீஷ் ராவத் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sams - Palakkad,இந்தியா
24-பிப்-201901:06:42 IST Report Abuse
sams Appo bjpku ithu appa? Yerkanave mp sathisgar rajastan la sanku oothiyachu in up ya?
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201918:16:49 IST Report Abuse
Tamilan இது காலம் கடந்த ஞானோதயமா ? அல்லது காலத்தின் கட்டாயமா?. தாங்கள் மூன்றில் ரெண்டு பங்கு மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்யும்போதெல்லாம் செய்யாமல் இப்படி பூச்சியத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போதாவது இதுபற்றி யோசிப்பது தங்கள் ஆத்மா சாந்தியடையவாவது உதவலாம் .
Rate this:
Share this comment
Cancel
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
23-பிப்-201917:53:04 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan இராமாயண காலத்து ராமருக்குத்தானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X