வறட்சியில் குடிநீர் இணைப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியில் குடிநீர் இணைப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு

Added : பிப் 23, 2019
Advertisement

சங்ககிரி: வறட்சியில், புதிய குடிநீர் இணைப்பு வழங்க, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சங்ககிரியில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், வாரம் ஒருமுறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. சில வார்டுகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, போர்வெல்லில், தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், காவிரி நீரையே, மக்கள் நம்பியுள்ளனர். அது பற்றாக்குறையாக உள்ளதால், தண்ணீரை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது, வறட்சியை சமாளிக்க, பேரூராட்சி நிர்வாகம், புதிய குடிநீர் இணைப்பு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று, பேரூராட்சி ஊழியர்கள், சங்ககிரி மலையடிவாரம், வேல்முருகன் நகருக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில், புதிய இணைப்பு வழங்க பள்ளம் பறித்தனர். இதையறிந்த மக்கள், புது இணைப்பு வழங்கக்கூடாது என, எதிர்ப்பு தெரிவித்ததால், உடனே பணியாளர்கள் சென்று விட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் வீரபாண்டியன் கூறுகையில், ''மலையடிவாரத்தில், ஒரு மாதத்துக்கு முன், ஒரு இணைப்பு வழங்கப்பட்டது. அதில் குடிநீர் வராததால், அதை, வேல்முருகன் நகருக்கு செல்லும் குழாயில் இணைக்க, பணியாளர்கள் பள்ளம் பறித்தனர். மக்கள் எதிர்ப்பால், அந்த இணைப்பை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X