விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

Added : பிப் 23, 2019
Advertisement

தர்மபுரி: சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை?ாட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலை விநாயகர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, விநாயகர் உற்சவர் ஊர்வலம் நடந்தது. எஸ்.வி., ரோடு, கடைவீதி, காந்தி சாலை, வெளிப்பேட்டை தெரு, சுண்ணாம்புகார வீதி உள்ளிட்ட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதேபோல், இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X