இந்தியா - பாக்., இடையே ஆபத்தான சூழல் : டிரம்ப்

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019 | கருத்துகள் (21)
Advertisement

வாஷிங்டன் : புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாக்., இடையே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியா - பாக்., இடையே தற்போது நிலவும் சூழல் குறித்து பேசினார். அப்போது அவர், தற்போது இந்தியா - பாக்., இடையே மிக மிக மோசமான சூழல் உள்ளது. மிக ஆபத்தான சூழலும் கூட. இந்த போர் சூழலை தடுத்து நிறுத்த விரும்புகிறோம். அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை நிறுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
இந்தியா மிக வலிமையான நாடாக காணப்படுகிறது. இந்த தாக்குதலில் இந்தியா ஏறக்குறைய 50 உயிர்களை இழந்துள்ளது. என்னால் அவர்களின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. இரு நாடுகளுடனும் அமெரிக்க நிர்வாகம் பேசி வருகிறது. இந்தியா - பாக்., இடையே பல பிரச்னைகள் உள்ளது. பாக்.,க்கு அளித்து வந்த 1.3 பில்லியன் டாலர் நிதியுதவியை நிறுத்தி உள்ளேன்.பாக்., உடன் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக பாக்., உடன் நல்லுறவை வளர்த்து கொள்ள விரும்பினோம் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
23-பிப்-201918:06:05 IST Report Abuse
RM War will affect Indian Economy. America and other strong nations always very happy for war bet.pak and India to sell their arms.India in a diplomatic way to deal this issue.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-பிப்-201916:17:42 IST Report Abuse
மலரின் மகள்கள் சரித்திரத்தின் சில நிகழ்வுகள் வடுக்களை அவமானங்களை மனதில் இருக்கின்றன. ஜீரணிக்கவே முடியாததாக இருக்கிறதே. வடிவேலுவின் சினிமா கதாபாத்திரத்தை போல எவ்வளவு அடித்தாலும் வாங்கி கொள்கிறார்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நம்மை உலகம் ஏளனம் செய்வதா? இந்தியா வலிமையான தேசம் மிக சிறந்த அறிவாளிகளை பெற்றுள்ளது. அதிக அளவிலான தொழில்நுட்ப மருத்துவ துணையியல் போன்ற அனைத்து துறையிலும் சிறப்பான பட்டதாரிகளை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் முடிவே எடுக்கமுடியாமல் தவித்து கொண்டே தள்ளி போட்டுக்கொண்டே அமைதியாகவே இருந்து விடும் தேசம் அது என்று உலகத்தின் பார்வையில் நாம் இருக்கிறோமே அது ஏன்? அந்த எண்ணத்தை மாற்றமுடியாதா? உண்மையில் நாம் திரணியற்றவர்களா? பாதுகாப்பு என்ற விஷயத்தில் நாம் கோட்டை விடுகிறோம். பாதுகாப்பை நாம் கொஞ்சமும் பற்றி கவலை படுவதே இல்லை? தெருவெங்கும் குழிகள் பள்ளங்கள் மூடப்படாத ஆழ்குழாய் கிணற்றில் இளம் குழந்தைகள் விழுந்து இறப்பது தொடரத்தான் செய்கிறது. மின்சார கம்பிகள் அறுந்து கிடக்கும். குடிநீரும் கழிவு நீரும் கலந்தே செல்லும் தேசம் நம் தாய் திருநாடு. எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழிக்கும் ஆண்கள், கோவிலின் சுற்றுச்சுவர் பகுதியில் கூட. அது வெள்ளம் சுகாதார கேடு, உடல்நிலை சீர்கெடுக்கு வித்திடும் அதுவும் நாம் பாதுகாப்பின்மைக்கு செய்யும் உத்திரவாதம் தானே. நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலை கெட்ட அரசின் கையாலாகாத்தனத்தை எண்ணி விட்டால். ராணுவ வீரர்கள் மன தைரியம் இழப்பார்களல்லவா? நமது ராணுவ ஊர்திகள் மீது ராணுவ வீரர்கள் மீது பயங்கர தாக்குதல்களை செய்திருக்கிறார்கள். டன் கணக்கில் ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை வீசி இருக்கிறார்கள். நாம் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துகிறோம். சவப்பெட்டியை சுமந்து செல்வதில் நாட்டு பற்று இருப்பதாக செல்ஃபீ யம் எடுத்து கொள்கிறோம். வேதனையாக இருக்கிறது உங்கள் செயல். தினவெடுத்து நேனு நிமிர்த்தி கொடுவாள் ஏந்தி கொள்ள வருபவனிடம் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதா தேசப்பற்று? ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய பிறகாவது நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டிருக்க வேண்டாமா? செய்திகளில் வாசகர்களின் கருத்துக்கள் ட்விட்கள் வாட்ஸாப்ப் களை பார்த்தல் நாம் அதிகம் பிளவு பட்டிருக்கிறோம் ஏன் . இந்தியர்களில் பலர் இந்திய எண்ணம் கொண்டவர்கள் இல்லவே இல்லையா? தேர்ந்தெடுத்த நம்பிக்கை கொண்ட நமது அரசு என்ன செய்கிறது நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஏன் மௌனம் காக்கிறார்கள். திருமண நிகழ்வு அது இது என்று செல்கிறார்களே தவிர ராணுவ சகோதரனுக்கு நேர்ந்த அவமானத்தை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களா? ஒரு யுத்தம் நிச்சயம் வேண்டும். தாக்குங்கள் மிகப்பெரும் தாக்குதல் நடத்துங்கள். தாக்கி அழியுங்கள் கயவர்களை. நிர்மூலமாக்கி விட்டு வாருங்கள். நமது ராணுவ சகோதரர்களை நான் முழுமையாக நம்புகிறேன். அவர்களின் வெற்றிக்கு பராசக்தியின் அருள் நிச்சயம் கிடைக்கும். நமது பிரார்த்தனைகள் நமது சகோதரர்களின் மிகப்பிரமாண்ட வெற்றியே. ஒரு பெரிய யுத்தம் உலகம் நம்மை கண்டு பெருமை கொள்ளும். அடுத்து நூறு நூறு ஆண்டுகளுக்கு நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். வருமானத்தை பொருளாதார மேம்பாட்டில் ஈடுபடுத்தி உலக வல்லரசாக வல்லரசாக மாறலாம். இறந்த வீரர்களை குடும்பத்திற்கு சமாதானமும் ஆறுதலும்சொல்லி அவர்களின் தியாகத்தை கொச்சை படுத்தற்காதீர்கள். எதிரிகளை கொன்று வெற்றி மலர்களை அவர்களுக்கு காணிக்கை யாக்குங்கள் அதுவே நமது கடமை, உடனே தேவை. செய்வீர்களா?
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
23-பிப்-201919:25:44 IST Report Abuse
Malick Rajaஏன் யுத்தம் செய்யவேண்டும் ? எப்படி பாதுகாப்பில் ஊடுருவல் என்பதை கண்டுபிடித்து நம்மில் யார் இருந்தார்கள் என்பதை முதலில் கண்டுபிடித்து அதன் பின் தேவையானால் மட்டுமே யுத்தம் ..யுத்தம் என்பது அழிவின் நாசத்தில் முடிவது . எதிரிநாட்டு இலக்குகள் இலகுவானவை போட்டுத்தள்ளிவிடலாம் .. ஆனால் மனநல நோயாளி போன்றவனிடத்தில் மதிநுட்பத்துடன் நேர்காணல் வேண்டும் ..நமது இலக்குகள் வலிமையான,சிறப்பான ,விலைமதிப்பற்றவற்றை திரும்ப பழையநிலைக்கு கொண்டுவருதல் கடினம் .. கடினமான நடவடிக்கை நம்மில் கறுப்பாட்டை களையெடுத்தலே ஆகும் .....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-பிப்-201915:50:10 IST Report Abuse
இந்தியன் kumar மசூத் அசார் கும்பலை சிறையில் தள்ள அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X