ஓசூர் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

Added : பிப் 23, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் விழா நடந்தது. ஓசூர் அடுத்த, சூடுகொண்டப்பள்ளி, அலசப்பள்ளி, வத்திரப்பள்ளி, தாசரிப்பள்ளி, அம்லெட்டியில், வேளாண்மைத்துறையில் உள்ள பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கியத்துவம், நன்மைகள் குறித்து, விரிவாக எடுத்து கூறப்பட்டது. சூடோமோனஸ், பஞ்சகாவியா, பூச்சி விரட்டி, வேப்பம் புண்ணாக்கு, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற, வேளாண் இடுபொருட்களை, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, விவசாயிகளுக்கு வழங்கினார். மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குனர் பிரதிப் குமார்சிங், இயற்கை விவசாய சாகுபடி முறைகள் குறித்து பேசினார். ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் மனோகரன், இயற்கை உரங்களான பஞ்சகாவியா, இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகள் குறித்து, அதனால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். ஓசூர் துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், விவசாய குழுவை இணைய தளத்தில் பதிவு செய்தல், தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கினார். ஏற்பாடுகளை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் செய்திருந்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X