லாரி ஆக்சில் துண்டிப்பால் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி ஆக்சில் துண்டிப்பால் போக்குவரத்து பாதிப்பு

Added : பிப் 23, 2019
Advertisement

அந்தியூர்: அந்தியூர் அருகே பட்லூரிலிருந்து, முனியப்பன்பாளையம் பகுதிக்கு, செம்மண் லோடு ஏற்றிய டிப்பர் லாரி சென்றது. ராமகவுண்டன் கொட்டாயியை சேர்ந்த, மாரிமுத்து, 50, என்பவர் லாரியை ஓட்டிச்சென்றார். அந்தியூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றபோது, லாரியின், பின் சக்கர ஆக்சில் துண்டானது. லாரியின் பின் சக்கரங்கள் இரண்டும், தனியாக கழன்று, சாலையின் தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தால், பின்னால் வந்த வாகனங்கள், மேற்கொண்டு செல்ல முடியாமல் தேங்கி நின்றன. நேற்று மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின்படி, அங்கு வந்த, போக்குவரத்து போலீசார், டிப்பர் லாரியை ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X