விஷ வண்டு கடித்து பள்ளி மாணவர்கள் 10 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷ வண்டு கடித்து பள்ளி மாணவர்கள் 10 பேர் காயம்

Added : பிப் 23, 2019
Advertisement

குளித்தலை: விஷ வண்டு கடித்ததில், பணிக்கம்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், 10 பேர் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குளித்தலை அடுத்த, பணிக்கம்பட்டியில், அரசு நிதி உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அதில் படிக்கும், மேலபணிக்கம்பட்டி, நடுப்பட்டியை சேர்ந்த மாணவ, மாணவியர், 10 பேர், நேற்று காலை, பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, பணிக்கம்பட்டி அரசு கால்நடை மருந்தகம் அருகே, சாலையோரத்தில் உள்ள மரத்தில் இருந்த விஷவண்டுகள் (கதண்டு) பறந்து வந்து, அவர்களை கடித்தன. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின், பெற்றோருடன் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X