போலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்| Dinamalar

போலி பிரமாண பத்திரம் : கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019 | கருத்துகள் (23)
Advertisement

பெங்களூரு : கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தனது பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு, வருமான வரித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.



சோபா என்ற கட்டுமான நிறுவனம், அரசு பணத்தை சிவக்குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்காக பெற்று தந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிவக்குமாரிடம் விசாரணையை துவக்கினர். விசாரணையில், சிவக்குமார் 2018 ம் ஆண்டு தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதும், வருமானம் வரும் வழிகளை மறைத்ததும் தெரிய வந்தது. காங்.,ஐ சேர்ந்த சிவக்குமார் மீது ஏற்கனவே ஹவாலா பண மோசடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.



இதனையடுத்து சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும் படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்து, வருமானவரித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சிவக்குமார் மீதான இந்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டால், அவர் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால் போலியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை காரணம் காட்டி நேரடியாக ஒருவரை தகுதிநீக்கம் செய்ய முடியாது. அதே சமயம் இந்த விவகாரத்தை தேர்தல் கமிஷன் கோர்ட்டிற்கு எடுத்துச் சென்றால் சட்டத்தின் அடிப்படையில் தேவைப்படும் பட்சத்தில் தகுதிநீக்கம் செய்ய முடியும் என முன்னாள் லோக்சபா பொது செயலாளர் சுபாஷ் காஷ்யாப் தெரிவித்துள்ளார்.





வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
23-பிப்-201915:27:31 IST Report Abuse
Endrum Indian இதெல்லாம் ஒரு பெரிய சமாச்சாரம் இல்லை
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
23-பிப்-201915:22:00 IST Report Abuse
I love Bharatham சிதம்பரம் ....மலகார்ஜுன கார்கே ...சிவகுமார் ...சோனியா'ஸ் மருமகன் ....இவர்கள் சொத்தை பறிமுதல் செய்தல் இந்தியா ..வளமான நாடாகிவிடும்
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-பிப்-201915:06:34 IST Report Abuse
Natarajan Ramanathan ரகீம் கனி......மனைவியை பிரிந்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டாலே ஒருவர் தன்னை SINGLE என்று குறிப்பிட இந்திய சட்டத்தில் இடம் உண்டு. எனவே விபரம் அறியாமல் உளர வேண்டாம்.
Rate this:
Share this comment
Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா
23-பிப்-201916:49:39 IST Report Abuse
Rahim Ganiஅவர் அப்படி சொல்லவே இல்லையன்றோ இத்தனை நாள் முட்டுக்கொடுத்தீர்கள் இப்போ என்ன இறங்கி வந்துவிட்டீர் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X