உதவியாளர் பணி நேர்காணல் ரத்து: கலெக்டர் அலுவலகம் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவியாளர் பணி நேர்காணல் ரத்து: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

Added : பிப் 23, 2019
Advertisement

நாமக்கல்: கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல், ஒத்திவைக்கப்பட்டதால், விண்ணப்பதாரர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள, 48 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு, 7,700 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல், நேற்று துவங்கி, வரும், 28 வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்புவது தொடர்பாக, நேர்காணல் உள்ளிட்ட அனைத்து பணிகளும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஆனால், அவற்றை அறியாமல், விண்ணப்பதாரர்கள் நேற்று, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு படையெடுத்தனர். நேர்காணல் ரத்து செய்யப்பட்டிருந்ததையறிந்து அதிர்ச்சியடைந்தனர். ஆத்திரமடைந்தவர்கள், கல்லூரி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நல்லிபாளையம் போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். அதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல் சமரசம் பேசினார். அப்போது, 'விரைவில் நேர்காணல் நடத்தப்படும். அதற்கான புதிய அழைப்பு கடிதம் அனுப்பப்படும். அவ்வாறு வராத பட்சத்தில், பழைய அழைப்பு கடிதத்தை கொண்டு வந்து நேர்காணலில் பங்கேற்கலாம்' என, உறுதி அளித்தார். அதையடுத்து, முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X