கல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்விக்கடன் ரத்து செய்வோம்: ஸ்டாலின்

Updated : பிப் 23, 2019 | Added : பிப் 23, 2019 | கருத்துகள் (45)
Advertisement
திமுக, D.M.K, M.K.Stalin, Stalin, தி.மு.க, ஸ்டாலின், dmk,

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தொரப்பள்ளியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: மத்தியில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். திமுக வெற்றி பெறும் என்பதால், தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிமுக அரசு தள்ளிப்போடுகிறது. லோக்சபா தேர்தலுடன் 21 தொகுதி இடைத்தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்தபின் கட்சி பாகுபாடின்றி, தகுதியான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.





வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TamilArasan - Nellai,இந்தியா
23-பிப்-201919:54:49 IST Report Abuse
TamilArasan சாமியோவ் அது என்ன கல்வி கடனை மட்டும்தான் ரத்து செய்விங்களா...? வீட்டு கடனை ரத்து செய்தால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்... மொத்த ஓட்டையும் அள்ளிவிடலாம் யார் அப்பன் வீட்டு சொத்து நமக்கென்ன நீங்கபாட்டு தைரியமா அறிவிங்க அப்படியே அள்ளிடலாம் முதல்வர் பதவியை... ஜப்பான் துணை முதல்வர் என்றெல்லாம் ஒலரவேண்டாம் தமிழக முதல்வராகிடலாம்... என்ன ஒரு சிந்தனை இவர்களுக்கு பதவிக்கு வர என்ன மாதிரி சமுகத்தை உருவாக்குகிறார்கள்... வேலை கிடைக்கும் வரை கல்வி கடன் தவணை கட்டவேண்டாம் என்று கூறுவார்களா கடனையே ரத்து செய்கிறோம் என்று தவறான வழிகாட்டுவார்களா...? இப்படியே கடனை எல்லாம் ரத்து செய்வதாய் இருந்தால் நாளை எவன் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவான்...?ஒழுங்காக வீட்டு கடன் கட்டிவரும் நடுத்தர மக்களின் வயிற்றில்தானே அடிக்க போறீங்க...? வீட்டு கடனிற்கான வட்டி சதவிதம் ஆண்டிற்கு 9 % இருப்பது 20 % ஆக்கினால் தான் வங்கிகளால் உங்களின் இந்த கடன் ரத்தால் ஏற்படப்போகும் இழப்பை ஈடுகட்ட முடியும்... இவரெல்லாம் முதல்வர் ஆகினால் தமிழக மக்கள்தான் பாவம்...
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
23-பிப்-201919:17:51 IST Report Abuse
S.Ganesan நீட் தேர்வை ரத்து செய்து டாக்டர் சீட் வாங்கித்தருவோம் என்று பொய் சொல்லி ஒரு அனிதாவை இழந்தது போதாதா ? கல்விக்கடன் ரத்து என்று சொல்லி மறுபடியும் எத்தனை பேரை இழக்க போகிறோம் ?
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
23-பிப்-201918:55:24 IST Report Abuse
S.Ganesan கல்வியை இலவசமாக்குவோம் என்றாலாவது நம்பலாம். மாணவர்கள் வங்கியில் கடன் வாங்கிய பணத்தை பெற்று கல்லூரிகள் நடத்தும் அரசியவாதிகளை , பெரும் புள்ளிகளை விட்டு விட்டு , வங்கிகளின் மூலதனத்தில் எப்படி கை வைக்க முடியும். மேலும் கடன் வழங்கியுள்ளது தனியார் மற்றும் மத்திய அரசால் மேற்பார்வை செய்யப்படும் வங்கிகள். அந்த வங்கிகளின் செயல் பாட்டில் இவரால் ஒன்று செய்ய முடியாது. கூட்டுறவு வங்கிகள் எந்த அளவுக்கு கல்விக்கடன்கள் கொடுத்துள்ளன என்பது தெரியவில்லை. அவை ஏற்கனவே ஊழலில் சிக்கியுள்ளதை நாடே அறியும் என்னவோ தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் - வந்தால்தான்- இந்தியாவையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைக்கும் இவரது பேச்சை கேட்டால் சிரிப்பும் , வெறுப்பும் வருகிறது. ஊர்சபை கூட்டம் என்ற பெயரில் என்னவோ அந்த காலத்தில் அரசர்கள் மக்கள் குறை கேட்டு சரி செய்கிற மாதிரி ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது நன்றாக தெரிகிறது. உங்கள் கட்சி ஆட்சியில் இருந்த போது ஒரு முறையாவது இவர் இந்த மாதிரி கிராமங்களுக்கு போனதுண்டா ? இப்போது இந்த சீன் எதற்கு ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X