அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி ஒதுக்கீட்டால் சிலருக்கு வயிறு எரியுதுராமதாஸ் கிண்டல்

Added : பிப் 23, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுச்சேரி, ''அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா, 'சீட்' ஒதுக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு, சிலர் வயிறு எரிகின்றனர்,'' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறினார்.புதுச்சேரியில் நடந்த, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் பேசியதாவது:இது, கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க, கடந்த டிசம்பர் மாதம் நடந்த செயற்குழு, பொதுக்குழுவில்
தொகுதி ஒதுக்கீட்டால் சிலருக்கு வயிறு எரியுதுராமதாஸ் கிண்டல்

புதுச்சேரி, ''அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க.,வுக்கு, ஏழு லோக்சபா தொகுதிகள், ஒரு ராஜ்யசபா, 'சீட்' ஒதுக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு, சிலர் வயிறு எரிகின்றனர்,'' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறினார்.புதுச்சேரியில் நடந்த, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் பேசியதாவது:இது, கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க, கடந்த டிசம்பர் மாதம் நடந்த செயற்குழு, பொதுக்குழுவில் எனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை, சரியாக பயன்படுத்தி உள்ளேன் என்பதைநிரூபித்துள்ளது.தங்களது கூட்டணிக்கு வர வேண்டும் என, நம்மை பலரும் அழைத்தனர். தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக, பா.ம.க., உள்ளது. அதனால் தான், பெரிய கட்சிகள் நம்மை கூட்டணிக்கு கூப்பிடுகின்றன.கூட்டணியில் நமக்கு, ஏழு லோக்சபா, ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதை கேள்விப்பட்டு, சிலர் வயிறு எரிகின்றனர்.நாம், 10 தொகுதிகளை கேட்கக் கூடிய தகுதி பெற்றவர்கள். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும், 40 தொகுதிகளை பகிர்ந்து தர வேண்டிய கட்டாயத்தில், அ.தி.மு.க., உள்ளது.ஒரு ராஜ்யசபா சீட் என்பது, இரண்டு லோக்சபா தொகுதிக்கு சமம். எனவே, ஒன்பது தொகுதிகளை பெற்றுள்ளோம். பா.ம.க.,வினரை பொறுத்தவரை, எப்போதும் யார் முதுகிலும் குத்தியது கிடையாது. யார் காலையும் வாரியதும் கிடையாது. கூட்டணிக்காக உண்மையாக உழைத்தவர்கள் நாம்.நமது கூட்டணி, இயற்கையாக அமைந்தது. கூட்டணி அறிவிப்பதற்கு முன்பே, அ.தி.மு.க., - பா.ம.க., தொண்டர்கள் கைகோர்த்துக் கொண்டனர்.நமது கொள்கைகளை, எந்த காலத்திலும் விட்டுத் தந்தது கிடையாது. கூட்டணி சேரும்போது, நாணலாக கொஞ்சம் வளைவோம். ஆனால், கொள்கையை விட்டுத்தந்து பேரம் பேசவில்லை.இவ்வாறு, ராமதாஸ் பேசினார்.

ரூ.2,000 இனாம் பெற உதவுவர்
ராமதாஸ் கூறியதாவது:தமிழகத்தில், அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கும், விவசாயிகளுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, தலா, 2,000 ரூபாய் வழங்கும், மத்திய அரசின் திட்டத்திற்கும், பயனாளிகளை பதிவு செய்யும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.மாநில அரசு வழங்கும் நிதியுதவி பெற, ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கி கணக்கு விபரம் ஆகியவற்றை, ஊராட்சி செயலரிடம் வழங்கினால் போதுமானது.இவ்விபரங்கள் தெரியாததால், பலர் நிதியுதவி பெற விண்ணப்பிக்கவில்லை. எனவே, பா.ம.க., நிர்வாகிகள், விவசாயிகளை அணுகி, அவர்கள் நிதியுதவி பெற, விண்ணப்பிக்க உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


அன்புமணி ஆவேசம்?
பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு அடுத்த பெரிய கட்சியாக, பா.ம.க., உள்ளது. நமது இலக்கு, ஆட்சிக்கு வருவது மட்டுமல்ல; தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதும்தான். தமிழகத்தில், பா.ம.க., ஆட்சிக்கு வரும். அது, காலத்தின் கட்டாயமாகும்.பா.ம.க., நிறுவனர் ராமதாசை விமர்சிக்க, யாருக்கும் தகுதி கிடையாது. அவர் எடுத்துள்ள முடிவு, வெற்றிக்கு வழி வகுக்கும்.நாம் சூழலுக்கு ஏற்ற வியூகங்களை வகுக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான், ராமதாஸ், தற்போதைய முடிவை எடுத்துள்ளார்.இ.பி.எஸ்.,சும், பன்னீர்செல்வமும் ராமதாசை நேரில் சந்தித்து, ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர். இதுதான், நமக்கு கிடைக்கின்ற மரியாதை. ராமதாசுக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. தமிழகத்தின் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக, இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-பிப்-201911:35:42 IST Report Abuse
Malick Raja நல்லவர்கள் வல்லவர்கள் அத்துடன் மனிதநேய மாண்புடைய அனைவரது ஓட்டுக்களிலும் பாமகவுக்கு தேவை இல்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார் .. அவருக்கு தேர்தலில் போட்டியிட அதிக இடம் வேண்டும் அவ்வளவுதான் வெற்றி மற்றவர்களுக்கு போவதில் கவலைப்படமாட்டார்.. தேர்தல் முடிவுகளுக்குப் பின் மக்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை விரும்பவில்லை அதனால்தான் நமக்கு தோல்வி ஏற்பட்டது இனி யாருடனும் கூட்டணி வைக்கமாட்டோம் .. போதும் போதும் .. இனி பாமக தனித்தே நின்று சட்டமன்றம் சென்று ஆட்சி அமைக்கும் முதல்வராக அன்புமணியும் துணைமுதல்வராக சௌமியா அவர்களும் இருப்பார்கள் .. அடுத்த பாராளுமன்ற தேர்தலை அன்புமணி சந்திப்பார் என்றும் முழங்குவார் .. மானம் போய் உயிர்க்காவலா என்பது தனக்கு தெரியும் எனவே இனி கூட்டணி இல்லை
Rate this:
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
24-பிப்-201919:18:18 IST Report Abuse
Shroog ராமதாஸ் அவர்களின் கூட்டணி பத்தி அழகாக விளக்கி இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
24-பிப்-201914:04:51 IST Report Abuse
Amal Anandan கழகங்கள் பிஜேபியுடன் கூட்டணியே கிடையாதுன்னு பேசிட்டு இப்போ மருத்துவர் நியாயம் பேசுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X