அரசியல் செய்தி

தமிழ்நாடு

மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா...

Added : பிப் 24, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஒரு பெண்ணாக பிறந்து கடின உழைப்பால் சினிமா மற்றும் அரசியல் வானில் உச்சம் தொட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரது பிறந்த தினம் (பிப்., 24) இன்று கொண்டாடப்படுகிறது. கர்நாடாகாவின் மைசூரில் 1948 பிப்., 24ல் பிறந்தார். பெற்றோர் ஜெயராம் - வேதவள்ளி. இரண்டு வயதில் தந்தையை இழந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை நல்ல
  மண்ணும்  கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா...

ஒரு பெண்ணாக பிறந்து கடின உழைப்பால் சினிமா மற்றும் அரசியல் வானில் உச்சம் தொட்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவரது பிறந்த தினம் (பிப்., 24) இன்று கொண்டாடப்படுகிறது.

கர்நாடாகாவின் மைசூரில் 1948 பிப்., 24ல் பிறந்தார். பெற்றோர் ஜெயராம் - வேதவள்ளி. இரண்டு வயதில் தந்தையை இழந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை நல்ல மதிப்பெண்களுடன் நிறைவு செய்தார். மேல்படிப்ப படிக்க திறமை இருந்தும் குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது.

ஆனாலும் தன் திறமையால் 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். தமிழ் திரையுலகில் 'ஸ்கர்ட்' அணிந்து நடித்த முதல் நடிகை. 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை தட்டிச் சென்றது. நடிகர் எம்.ஜி.ஆருடனான அவரது ஜோடி அந்தக்காலத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது. சொந்த குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.கடைசி படம் 'நதியை தேடி வந்த கடல்' 1980ல் வெளியானது.


அரசியல் நுழைவுஎம்.ஜி.ஆர். வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1983ல் திருச்செந்துார் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவினார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1984 டிசம்பரில், எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., - காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் ஜெயலலிதாவின் பங்கு முக்கியமானது.

எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் 1987ல் ஜெ., அணி, ஜானகி அணி என அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் சட்டசபை தேர்தலில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களில் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வென்ற ஜெ., முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது.


ஆறு முறை முதல்வர்அ.தி.மு.க, கூட்டணி 1991 தேர்தலில் 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதன்முறை முதல்வரானார். பின் 2001, 2011 தேர்தல்களில் வென்று முதல்வரனார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆர்., க்குப்பின், தொடர்ந்து 2வது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016 செப். 22ல் உடல்நலம் பாதிக்கப்பட, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5ல் மரணமடைந்தார்.எத்தனை பெருமை

பெண்களாலும் அரசியலில் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார். ஆறுமுறை தமிழக முதல்வர், இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த இரண்டாவது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவில் வெற்றி நாயகி, ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், தைரியமான பெண்மணி என பல சிறப்புகளை பெற்றவர்.


விருதுகள்

தேசிய விருது, பிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, தங்க தாரகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். ஐந்து பல்கலை சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.மன உறுதிசொத்துக்குவிப்பு வழக்கில் 2014 செப்., 27ல் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை விதித்தது. முதல்வர் பதவியை இழந்தார். இது அவரது மனம் மற்றும் உடல்நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் மேல்முறையீட்டு வழக்கில் 2015 மே 11ல் கர்நாடக உயர்நீதிமன்றம் இவரை விடுவித்தது. 2016 தேர்தலில் மக்களால் மீண்டும் முதல்வராக தேர்வானார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
02-மார்-201918:01:58 IST Report Abuse
murali கருணாநிதியை விட அம்மா எவ்வளவோ மேல் ஆனவர். கொள்ளை அடித்தாலும் ஜாதி மதம் பாராமல் அடுத்தவர் குடும்பத்துக்கு உழைத்து பேரை கெடுத்துக் கொண்டார். கட்டுமரமும் சுடலையும் தங்கள் குடும்பத்துக்கு மட்டுமே கொள்ளை அடித்துக்கொண்டவர்கள்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
25-பிப்-201918:03:12 IST Report Abuse
raghavan இரும்பாய் இருந்தவரை, எதிரிகள் வெல்ல முடியவில்லை..துரோகிகள் உடன் உறவாடி, துருவாக்கி அழித்தேவிட்டார்கள்..
Rate this:
Cancel
raja - Kanchipuram,இந்தியா
24-பிப்-201920:49:33 IST Report Abuse
raja ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்காக உழைத்த பெரும் போராளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X