பொது செய்தி

இந்தியா

மார்ச் 1 முதல் கெஜ்ரிவால் உண்ணாவிரதம்

Updated : பிப் 24, 2019 | Added : பிப் 24, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி: டில்லிக்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி, மார்ச் 1 முதல் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.





டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார்.மாநில நிர்வாகத்தில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற, அதிகாரம் தேவை என்பதால், டில்லிக்கு, தனி மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என, அம்மாநில அரசு கோரி வருகிறது.இந்நிலையில், நேற்று சட்டசபை கூட்டத் தொடரில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:போலீஸ், மாநகராட்சிகள் மற்றும் டில்லி மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட துறைகளை, மத்திய அரசு, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இது, டில்லி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் அவமானம். இதனால், டில்லி மக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.




மற்ற மாநில வாக்காளர்களை விட, டில்லி வாக்காளர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.எனவே, டில்லிக்கு, தனி மாநில அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி, மார்ச் 1 முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-பிப்-201915:02:10 IST Report Abuse
Endrum Indian இது எப்படி இருக்கிறதென்றால் ஆபீசில் வேலை செய்யும் ஒருவர் விடுப்பில் போவதற்கு 10 நாட்கள் முன்பு ஒரு லெட்டர் கொடுப்பாரே அது போல இருக்கின்றது. இதன் பொருள் எப்படியாவது நான் உண்ணாவிரதம் இருக்காமல் தடுக்க மாட்டார்களா என்ற நப்பாசை.
Rate this:
Share this comment
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
24-பிப்-201914:36:50 IST Report Abuse
S.BASKARAN இது மாதிரி முதல்வரை செலக்ட் செய்த மக்கள்தான் மிகவும் பாவம். இனியாவது சுதாரித்துக்கொள்ளவும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
24-பிப்-201914:27:47 IST Report Abuse
தமிழ்மைந்தன் உண்ணாவிரதம் இருப்பதை விட தனிமாநில அந்தஸ்து கிடைக்கும்வரை எந்த கோப்பிலும் கையெழுத்துப் போடமாட்டேன் என அறிவித்தால் என்ன?.... ஓ....சர்க்கரை அளவு குறையாதா........ அதற்கு உண்ணாவிரதம்தான் சிறந்ததா........ஓகே ..சார் ...ஸ்டார்ட்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X