மக்களுக்காக சேவை செய்ய விருப்பம்: வாத்ரா

Updated : பிப் 24, 2019 | Added : பிப் 24, 2019 | கருத்துகள் (101)
Advertisement

புதுடில்லி: நாட்டு மக்களுக்காக பெரிய அளவில் சேவை செய்ய விரும்புவதாக ராபர்ட் வாத்ரா தெரிவித்துள்ளார்.







ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ரா, லணடனில் சொத்துக்கள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இதனை தொடர்ந்து, விசாரணைக்கு அமலாக்கத்துறை முன் அவர் ஆஜராகி வருகிறார்.

இதற்கிடையில் பிரியங்கா உ.பி.,யின் கிழக்கு பகுதி காங்., பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பகுதியில், வாத்ரா, தேர்தல் பணி ஆற்றி வருகிறார். இந்நிலையில் பேஸ்புக் பக்கத்தில் அவர் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.





அதில், ஆண்டுக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் நாட்டின் பல பகுதிகளில் நான் பிரசாரம் செய்துள்ளேன். ஆனால் முக்கியமாக உ.பி.,யில் மக்களுக்காக நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன். என்னால் முடிந்த சிறிய மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கிறேன். சில பகுதிகளில் என்னை பற்றி மக்கள் தெரிந்து கொள்ள நினைக்கிறார்கள். அவர்களின் உண்மையான அன்பு, மரியாதையை பெற்றுள்ளேன். இத்தனை ஆண்டுகளாக பெற்ற அனுபவங்களையும், கற்ற விஷயங்களையும் வீணடிக்க முடியாது. அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்த நினைக்கிறேன். இந்த குற்றச்சாட்டுக்கள், விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகு அதனை பயன்படுத்த உள்ளேன். மக்களுக்கு சேவை ஆற்றுவதில் பெரிய பங்களிப்பை அளிக்க நினைக்கிறேன். இவ்வாறு வாத்ரா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
25-பிப்-201914:49:09 IST Report Abuse
Ramamoorthy P ரிமோட் கண்ட்ரோல் அரசியல் சோனியா/ மன்மோகன் காலத்தில் இருந்தது இப்போது ராபர்ட் / ராகுல் என்று புதிய அவதாரம் எடுக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-பிப்-201923:48:00 IST Report Abuse
தமிழ்வேல் இந்த ஆளு ஒண்ணுதான் குறைச்சல்.
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
24-பிப்-201923:28:14 IST Report Abuse
Mannai Radha Krishnan யூஸ்லெஸ் FELLOW ...... பணத்துக்காக பிரியங்காவை ஷாதீ செய்துகிட்டான்....இப்போ மஹாராஜா ஆகணும் என்கிற ஆசை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X