பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., சிறுத்தைகளுக்கு, நிபந்தனை!

தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு, தலா, ஒரு இடம் ஒதுக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம்,தேர்தலுக்குப் பின், அணி மாறாமல் தடுக்கும் வியூகமாக, 'இரு கட்சிகளும், 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வேண்டும்' என, தி.மு.க., திடீர் நிபந்தனை விதித்துள்ளது.நிபந்தனையை ஏற்காவிட்டால், இரு கட்சிகளையும் வெளியேற்றவும்,தி.மு.க., தலைவர், ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரசுக்கு, புதுச்சேரி உட்பட, 10 தொகுதிகளும், முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம், 29 தொகுதிகள் உள்ளன.இவற்றில், ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய, நான்கு கட்சிகளுக்கும், தலா, ஒரு தொகுதியை ஒதுக்கி, மீதமுள்ள, 25 தொகுதிகளில் போட்டியிட, தி.மு.க., திட்டமிட்டிருந்தது.

ரகசிய பேச்சு


சமீபத்தில், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த்தை, அவரது வீட்டில், ஸ்டாலின் சந்தித்து பேசினார்.இதைத் தொடர்ந்து, தி.மு.க., கூட்டணிக்கு, தே.மு.தி. க.,வை இழுக்க, ரகசிய பேச்சு நடந்து வருகிறது. தே.மு. தி.க.,வுக்கு,மூன்று தொகுதி களை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள, 22 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிட தயாராக உள்ளது.
அதே நேரம், வைகோவின்,

ம.தி.மு.க., மூன்று தொகுதிகளை கேட்கிறது. இரு கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், குறைந்தபட்சம், தலா, இரு தொகுதிகளாவது வேண்டும் என, அடம் பிடிக்கின்றன.இந்த கோரிக்கை குறித்து, பரிசீலித்து வரும், தி.மு.க., அதிரடி நிபந்தனை விதித்துள்ளது. 'ம.தி.மு.க., - வி.சி.,க்கள், உதயசூரியன் சின்னத்தில் கட்டாயம் போட்டியிட வேண்டும்' என, நிர்பந்தம் செய்கிறது.
தேர்தலுக்கு பின், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்போதும், தேசிய அளவில் அணிகள் மாற்றம் ஏற்படும்போதும், ஒரு, எம்.பி., பதவி கூட, பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக மாறிவிடும். எனவே, அத்தகைய நேரத்தில், சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள், அணி மாறுவதை தடுக்கும் வகையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை, தி.மு.க.,விதித்துள்ளது.
தி.மு.க.,வின் இந்த திடீர் நிபந்தனை, மதி.மு.க., - வி.சி.,க்களை கலக்கமடைய வைத்துள்ளது.

'மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட செய்யுங்கள்' என, வி.சி.,க்களுக்கு ஆதரவாக, திராவிட அமைப்பின் தலைவர் ஒருவர் பேச்சு நடத்தி உள்ளார்; இதில், உடன்பாடு எட்டப்பட வில்லை.

தேர்தல் அங்கீகாரம்


தற்போது, ம.தி.மு.க.,வுக்கு, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் இல்லை. அங்கீகாரத்தை பெற, மூன்று லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எனவே, மூன்று தொகுதிகள் வேண்டும் என்பதில், வைகோ விடாப்பிடியாக உள்ளார்.அதனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட்டால், ம.தி.மு.க.,வுக்கு அங்கீகாரம் கிடைக்காத நிலை ஏற்படும் என, வைகோ கூறி வருகிறார்.
எனவே, தி.மு.க.,வின் புது நிபந்தனையைஏற்றுக் கொள்வதா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்க, ம.தி.மு.க., உயர் நிலைக்குழுக் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், கட்சியின் தலைமையகமான,

தாயகத்தில் கூடுகிறது.அப்போது, தி.மு.க., நிபந்தனையை ஏற்று கூட்டணியில், ம.தி.மு.க., நீடிக்குமா; வெளியேறுமா அல்லது வேறு ஏதும் சமரச முயற்சிகளில் ஈடுபடுமா என்பது தெரிய வரும்.
இதற்கிடையே, நிபந்தனையை ஏற்காமல், தொகுதி எண்ணிக்கையில் முரண்டு பிடிக்கும் கட்சிகளை வெளியேற்றி, தே.மு.தி.க.,க்கு சற்று அதிக தொகுதிகளை கொடுத்து, கூட்டணிக்குள் இழுத்து போடவும், ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க.,வை

சேர்க்க எதிர்ப்பு


கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., - வி.சி., - கம்யூனிஸ்டுகள் இணைந்து, 'மக்கள் நலக்கூட்டணி' என்ற பெயரில், தே.மு.தி.க.,வுடன் இணைந்து போட்டியிட்டன. தற்போது, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தால், தாங்கள் விரும்பும் தொகுதிகள் கிடைக்காது என, இந்த கட்சிகள் கருதுகின்றன.
எனவே, தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வை சேர்க்கக் கூடாது என, ஒருமித்த கருத்து, இந்த கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை, தி.மு.க., எப்படி கையாளும் என, அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
01-மார்-201917:53:06 IST Report Abuse

S.kausalyaபோன முறை மதிமுக,சிறுத்தை,தேதிமுக, கம்யூனிஸ்ட் எல்லாம் தனியாக ஒரு கூட்டு வைத்தார்கள். அப்போது திமுக, அதிமுக கட்சியை ஊழல் கட்சி என்றெல்லாம் சொன்னார்கள். இப்போது அப்படியே திமுக பக்கம் வந்தாகிவிட்டது. புனித படுத்தப்பட்டு விட்டார்கள் போலும்

Rate this:
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
28-பிப்-201918:36:36 IST Report Abuse

Ramshanmugam Iyappanஇதற்கு வைகோ அவர்கள் DMK உடன் கட்சியை இணைத்துவிட்டு, தந்தை பெரியரைப்போல தேர்தலில் நிற்காமல் நாட்டுமக்களுக்கு நல்லதை செய்து,நல்ல பேரோடு செல்வது மிகவும் உகந்தது. ஏன் இந்த தலைகுனிவுஅசிங்கம் எல்லாம்

Rate this:
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
25-பிப்-201921:24:38 IST Report Abuse

Krishnamurthy Ramaswamyஒரு ஆங்கில பழமொழி நினைவுக்கு வருகிறது ' பெக் கர்ஸ் ஆர் நாட் சூஸெர்ஸ " அதாவது ' அதிகார பிச்சை கேட்க முடியாது .பிச்சை எடுப்பவர்கள் கொடுத்ததை வாங்கவேண்டியதை தவிர வேறு வழி இல்லை '

Rate this:
மேலும் 66 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X