துப்புரவு தொழிலாளர்கள் காலை கழுவிய மோடி

Updated : பிப் 25, 2019 | Added : பிப் 25, 2019 | கருத்துகள் (213)
Advertisement

புதுடில்லி : உ.பி.,யின் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 5 துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி, பாதை பூஜை செய்தார்.

கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக உ.பி., திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் புனிதநீராடி வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி தூய்மையாக பராமரிக்கப்படுவதற்காக அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகள் வழங்கினார். தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக, விருதுபெற்ற 5 துப்புரவு தொழிலாளர்களின் பாதங்களை கழுவி, பூஜை செய்தார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னதாக நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய மோடி, கும்பமேளாவிற்காக 20,000 க்கும் மேற்பட்ட குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இவற்றை துப்புரவு பணியாளர்கள் தூய்மையாக பராமரித்து வருகின்றனர். எனது சகோதர, சகோதரிகளான இவர்கள் தினமும் அதிகாலையிலேயே எழுகிறார்கள். இரவில் தாமதமாகவே தூங்கச் செல்கிறார்கள். நாள் முழுவதும் இப்பகுதியை தூய்மை வைத்துக் கொள்வதிலேயே கழிக்கிறார்கள். அவர்கள் எந்த பாராட்டையும் எதிர்பார்க்காமல் தங்கள் பணியை தொய்வும் இல்லாமல் செய்கிறார்கள். அவர்கள் எப்போதும் என் நினைவில் இருப்பார்கள் என்றார்.
Advertisement
வாசகர் கருத்து (213)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Madurai,இந்தியா
01-மார்-201901:37:44 IST Report Abuse
Arasu சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார் ,
Rate this:
Share this comment
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
03-மார்-201919:21:58 IST Report Abuse
E.V. SRENIVASANஇது ஏன் நீங்கள் ஜால்ரா அடிக்கும் தேச துரோகிகளுக்கு தெரியவில்லை? இப்பொழுது எத்தை தின்றால் பித்தம் தீரும் என்று உள்ள காங்கிரஸ் தலைவர்கள் செய்ய வேண்டியததுதானே?...
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-பிப்-201900:35:40 IST Report Abuse
Matt P நானா இருந்தால் , என் கைகள் நன்றாக தான் வேலை செய்கிறது . நானே கழுவி கொள்வேன் என்று சொல்லியிருப்பேன் .
Rate this:
Share this comment
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
03-மார்-201919:23:26 IST Report Abuse
E.V. SRENIVASANஇது மதம் மாறும் முன்பு ஏன் தெரியாமல் போய்விட்டது? கொடுத்த பிச்சை காசுக்கு மதம் மாறுவானேன்?...
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-பிப்-201900:33:34 IST Report Abuse
Matt P எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும் . தொழிலாளர்களையும் ,விவசாயிகளையும் அமர்ந்து வேலை பார்க்கும் அதிகாரிகள் எல்லோரும் மனிதர்கள் தான் என்ற உணர்வு வர வேண்டும் . நமக்கு கொடுக்கப்பட்டிருக்கப்பட்ட பணியினை செவ்வனே செய்ய வேண்டும் . துப்புரவு தொழிலாளர்களின் காலை இவர் கழுவுகிறார் என்றால் ,அவர்களுக்கு நாம் துப்புரவு தொழிலாளி அதனால் தான் இவர் நமது காலை கழுவி பெருமை தேடி கொள்கிறார் என்ற உணர்வு வந்து விட கூடாது.உடுக்கை இழந்தவன் கரம் போல ஆபத்துக்கு உதவ வேண்டும். ஆபிரஹஆம் Lincoln காரில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு பன்றியின் கால் சகதியில் அகப்பட்டு வெளிவர முடியாமல் துடித்து கொண்டிருந்ததாம் அந்த pantry . உடனே காரை நிறுத்தி அந்த காலை வெளியே எடுத்து ,அதற்க்கு பிழைப்பு கொடுத்தாராம் .இதை செய்யாவிட்டால் நான் இன்றைக்கு உறங்க முடியாமல் தவித்து கொண்டிருப்பேன் என்று சொன்னனாராம் . அடிமை தளத்தை ஒழித்தவரும் அவர் தான் . நவீன வாழ்க்கைக்கு ஏற்ப ,,தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அவர்கள் பணியை எளிதாக்கும் முயற்சியை மேற்கொள்ளுதல் காலை கழுவுவதை விட மேல் …..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X