அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி ஏன்?: அன்புமணி விளக்கம்

Updated : பிப் 25, 2019 | Added : பிப் 25, 2019 | கருத்துகள் (106)
Advertisement

சென்னை : கூட்டணி இல்லை என்ற நிலையை மாற்றி அதிமுக மற்றும் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது ஏன் என பாமக அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, லோக்சபா தேர்தல் தொடர்பாக கூட்டணி முடிவெடுக்க பாமக நிறுவனர் ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழு முடிவு எடுத்துள்ளது. நிர்வாகிகளை கேட்டறிந்து ஆலோசித்த பிறகே அதிமுக.,வுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டது. காவிரி டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களையும் கொண்டுவரக் கூடாது என்ற பாமகவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். 7 பேரின் விடுதலை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை அளித்துள்ளோம். அது தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் தருவோம்.





திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனித்து களம் இறங்கிய போது 6 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றோம். ஆனால் ஊடகங்களும், மக்களும் எங்களை அங்கீகரிக்கவில்லை. 2011 சூழலின் அடிப்படையில் கூட்டணி இல்லை என முடிவு செய்யப்பட்டது. தற்போது ஜெயலலிதாவும் இல்லை, கருணாநிதியும் இல்லை. அதனால் கூட்டணி முடிவை மாற்றி உள்ளோம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மை, மறுக்கவில்லை. அப்போது இருந்த சூழல் வேறு; தற்போதுள்ள சூழல் வேறு.

அடுத்த தேர்தல் நிலைப்பாடு குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது. கடுமையாக விமர்சித்து விட்டு, இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக பலரும் கேட்கிறார்கள். தேசிய அளவில் கடுமையாக விமர்சித்துக் கொண்ட பல கட்சிகள், பின் நாளில் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன. காங்.,ஐ திமுக விமர்சிக்கவில்லையா? விமர்சனம் செய்தால் கூட்டணி வைக்கக் கூடாது என ஏதும் உள்ளதா?கூட்டணி சேர்வதால் எங்களின் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். லோக்சபா தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். தமிழகத்தின் நலன் கருதியே விமர்சனம் செய்தோம். முதலில் வெளியில் இருந்து எதிர்த்தோம். தற்போது கூட்டணியில் இருந்து அழுத்தம் கொடுப்போம். இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதே சமயம் ஆதரவு அளிக்க மாட்டோம் என கூறவில்லை.





இடைத்தேர்தலில் போட்டியில்லை என்பதால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறோம். அதிமுக உடனான கூட்டணி குறித்து விளக்கம் அளிப்பதில் எந்த நெருடலும் இல்லை. தமிழக அரசு மீதான ஊழல் புகார் குறித்து கவர்னரிடம் மனு அளித்தது உண்மை தான். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்போதும் எங்களின் நிலைப்பாடு. மத்திய, மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்ற முடியும் என்பதாலேயே கூட்டணி முடிவு . தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காக பா.ஜ.,வை விமர்சித்தோம்.

அவர்களுடன் சேரவில்லை என்ற ஆதங்கத்தாலும், நாங்கள் வெற்றி பெறுவோம் என ஸ்டாலினுக்கு முன்பே தெரிந்திருக்கலாம். அதனால் ஏற்பட்ட தோல்வி பயத்தாலும் ஸ்டாலின் எங்களை விமர்சனம் செய்கிறார். ஆனால் நாங்கள் அவர்களை பதில் விமர்சனம் செய்யப்போவதில்லை.பல கட்சிகள் கூட்டணிக்காக எங்களை அணுகினார்கள். கடந்த 4 தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறவில்லை. அதனால் தற்போது வியூகத்தை மாற்றிக் கொண்டுள்ளோம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
25-பிப்-201919:38:16 IST Report Abuse
rmr காங்கிரஸ் கூட கூட்டணி இல்லை என்று திமுக சொல்லிச்செ அதை பத்தி யாரும் கேக்க மாட்டாங்களா இல்ல கேக்க பயமா ? சற்று நடு நிலையோடு இருப்பது ஊடகங்களுக்கு நல்லது
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-பிப்-201908:23:17 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதை தினமலர் மட்டும் தான் சொல்லிச்சி.. கேட்டுபாரேன்...
Rate this:
Share this comment
Cancel
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
25-பிப்-201919:27:00 IST Report Abuse
துயில் விரும்பி இவர்களை ஊடகங்கள் உள்பட அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Ajit Kumar - Chennai,இந்தியா
25-பிப்-201918:52:59 IST Report Abuse
Ajit Kumar நீங்கள் செய்த துரோகத்திற்கும் இப்போ அப்போ மாறி மாறி பேசி எங்களை கொழப்புவதுக்கு வன்னியானாக இருக்க நானும் வெட்க படுகிறேன்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X