இறையாண்மைக்கு எதிராக மெகபூபா

Updated : பிப் 25, 2019 | Added : பிப் 25, 2019 | கருத்துகள் (55)
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநில அரசுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கும், அரசியல் சாசன சட்டம், 35 ஏ பிரிவு தொடர்பாக, முன்னாள் முதல்வர் மெகபூா எதிர்ப்பு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






ஜம்மு - காஷ்மீர் மாநில அரசுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்க வகை செய்யும், அரசியல் சாசன பிரிவு, 35 ஏ, ன்படி அந்த மாநிலத்தில், வெளி மாநிலத்தவர் யாரும் நிலம் வாங்க முடியாது. இந்த சட்டம் தொடர்பான தன் நிலையை, மத்திய அரசு மாற்றிக்கொள்ள உள்ளதாகவும், இந்த சட்ட பிரிவை ரத்து செய்ய மத்திய அரசு, அவசர சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.புல்வாமாவில் நடந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு மத்திய அரசு இந்த நிலைக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.




இந்நிலையில் இந்த சட்ட விவகாரத்தை கையில் எடுத்து மத்திய அரசை மிரட்டும் வகையில் அம்மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பேசி உள்ளார். காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பை காட்டுவார்கள் என்றும் பிற நாட்டு கொடிகளை ஏந்துவார்கள் என்றும் கூறியுள்ளார். இது வன்முறையை துாண்டும்படியாக அமைந்துள்ளது. இது இந்தியாவுக்கு எதிரான விஷம பிரசாரம் ஆகும். இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மெகபூபா செயல்பட்டுள்ளார். இதனால் மெகபூபாவை உடனடியாக கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vvkiyer - Bangalore,இந்தியா
02-மார்-201917:18:32 IST Report Abuse
vvkiyer Ms. Mufti should be booked for sedition.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-பிப்-201912:10:12 IST Report Abuse
Selvaraj Chinniah முன்பே ஒரு கட்டுரையில், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்று என்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தேன்.உடனடியாக காஷ்மீரின் தனி அந்தஸ்து சலுகையை ரத்து செய்து சட்டம் வகுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி ஆப்கானிஸ்தான் விமானக்கடத்தல் போது ஆஸாத் விடுதலை செய்வதற்கு காரணம் பாஜாக மட்டுமே அல்ல. பாஜக விற்கு தனிப்பெறும்பான்மை இல்லை.அப்போது இருந்த எதிர் கட்சியினரும் பாஜகவின் தேசப்பற்று இல்லாத கூட்டணிகளின் நிர்பந்தமே காரணம். அத்வானி கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் சமாளித்து பார்த்தார். தினம் தோறும் பினைக்கைதிகளின் உறவினர்களின் போராட்டத்தாலும் எதிர்கட்சிகளின் நெருக்கடியாலும் அவன் விடுவிக்கப்பட்டான். மோடி மட்டும் இருந்திருந்தால் நிலமையே வேறாக இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X