பதிவு செய்த நாள் :
நாட்டை விட சிலருக்கு குடும்பமே முக்கியம்!
போர் நினைவுச் சின்னம்
திறப்பு விழாவில் மோடி பேச்சு

புதுடில்லி: ''ஒரு சிலருக்கு, நம் நாட்டின் நலன், பாதுகாப்பைவிட, தங்கள் குடும்பமே முக்கியமாக இருந்துள்ளது,'' என, டில்லியில் நடந்த, தேசிய போர் நினைவுச் சின்னம் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, கடுமையாக விமர்சித்தார்.

modi,pm,பிரதமர்,மோடி,போர் நினைவுச் சின்னம்,திறப்பு விழா


நாட்டின் சுதந்திரத்திற்குப் பின் உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிக்கும் வகையில், டில்லியில், இந்தியா கேட் பகுதியில், தேசிய போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில், உயிர் தியாகம் செய்த, 25 ஆயிரத்து, 942 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தம், 179 கோடி ரூபாய் செலவில், இது அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தை, நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்து, பிரதமர் நரேந்திர மோடி

பேசியதாவது: நம் ராணுவம் சுயசார்புடன் இருக்கும் வகையில், தேவையான முக்கிய முடிவுகளை உடனடியாக எடுத்து வருகிறோம். நாட்டை பாதுகாக்கும், பாதுகாப்புப் படையினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

வீரர்களின் உயிர் தியாகங்களே, நம் படைகள், உலகின் மிகவும் வலுவான படையாக விளங்குவதற்கு முக்கிய காரணம். 'போபர்ஸ்' பீரங்கி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என, நாட்டில் நடந்த அனைத்து ஊழல்களும், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை நோக்கியே கைகாட்டுகின்றன.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டுக்கு, அதி நவீன, 'ரபேல்' போர் விமானம் வந்து விடக் கூடாது என்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், நம் படைக்குதேவையான, இந்த விமானங்கள் விரைவில் வந்து சேரும்.

சிலருக்கு, நம் நாட்டின் நலன், பாதுகாப்பைவிட, தங்கள் குடும்பத்தின் நலனே முக்கியமாக இருந்தது. அதனால் தான், பாதுகாப்புப் படைக்கு

Advertisement

தேவையான ஆயுதங்கள், தளவாடங்களில் ஊழல்கள் செய்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நினைவிடம் அமைப்பதால், அந்த குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு, எந்த அரசியல் பலனும் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அதனால் தான், இதுவரை இது போன்ற ஒரு நினைவிடம் அமைக்க, அவர்கள் திட்டமிடவில்லை.

பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புக்காக, குண்டு துளைக்கான உடைகள் வாங்கக்கோரி, பல காலமாக, கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. முந்தைய ஆட்சியில் அது நடக்கவில்லை. ஆனால், பா.ஜ., அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில், 2.30 லட்சம் உடைகள் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-பிப்-201921:20:39 IST Report Abuse

Pugazh Vஎடுத்துக்காட்டுகளுடன் விளக்கமாக கருத்து எழுதினால் வராது. அல்லது குற்றுயிரும் குறைஉயிருமாக துண்டு துண்டா வரும்

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
26-பிப்-201915:22:33 IST Report Abuse

Krish Samiகொள்ளைக்கார ஸ்டாலின்/ கனிமொழி மற்றும் ராகுல் காந்தி பரம்பரைகள் பற்றி வேறு எப்படி சொல்வதாம். மீண்டும் கயவர்கள் கூட்டணி டெல்லியில் வந்தால் நாடி தாங்காது. அப்படி அமைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பா ஜ க ஆட்சி அமைக்க முடியுமானால், தி மு க விடம் எண்ணிக்கை இருக்குமானால், அங்கே தாவவும் தயங்காது என்றும் தோன்றுகிறது. தி மு க வுக்கு ஆட்சி கட்டிலில் எப்படியாவது அமரவில்லையன்றால், தூக்கமே வராது. அவர்கள் ஆட்சியில் அமர நேருமானால், மக்களுக்கு தூங்க முடியாது. (தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் - மின்சாரம் இருந்தால்தானே?)

Rate this:
26-பிப்-201912:37:05 IST Report Abuse

வெற்றிக்கொடி கட்டு குடும்பம் உள்ளவர்களுக்கு குடும்பம் தான் முக்கியம் பின்னர் ரஜினி என்ன சொன்னார் முதலில் குடும்பம் மற்றதெல்லாம் பின்னர் என்று சொன்னார் , குடும்பம் இல்லை எனில் நாம் என்ன செய்யமுடியும்

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X