அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கூட்டணி,இ.பி.எஸ்,eps,பன்னீர்,விளக்கம்

சென்னை: ''கொள்கை வேறு; கூட்டணி வேறு'' என்று பா.ம.க. - அ.தி.மு.க. கூட்டணி குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று புது விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன் வரை ஆட்சியையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்த பா.ம.க. திடீரென அ.தி.மு.க.வுடன் கைகோர்த்தது எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக இக்கட்சிகள் பா.ம.க.வை கடுமையாக விமர்சித்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் பா.ம.க. செயல்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது 'ஜெயலலிதாவை அதிகம் விமர்சித்த பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்தது தொடர்பாக கடும் விமர்சனம் வருகிறதே' என கேட்கப்பட்டது. அதற்கு அவர் ''அது வேற; இது வேற'' என்று புது விளக்கம் அளித்தார்.
முதல்வர் அளித்த பேட்டி: கூட்டணி என்பது அனைத்து இடங்களிலும் மாறி மாறி வைக்கப்படும். அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்தது குறித்து இப்போது பேசுகின்றனர். தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்தபோதும் இப்படி தான் விமர்சனம் செய்தனர்.
கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான்

ஒவ்வொரு கட்சியும் நினைக்கும். மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அக்கட்சிகள் விரும்பும். அந்த அடிப்படையில் தான் கூட்டணி அமைத்திருக்கிறோம்.
ஜெ. அரசு மக்களுக்கு தேவையான திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்களிடம் அரசுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. எனவே அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் லோக்சபா தேர்தலிலும் சட்டசபை இடைத்தேர்தலிலும் அதிக அளவில் வெற்றி பெறுவர்.
கூட்டணி குறித்து இன்னும் பல கட்சிகளுடன் பேசி வருகிறோம்; அவையும் வரும் என்று எதிர்பார்க்கிறோம். பேச்சு முடிந்த பின் தான் அ.தி.மு.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது தெரியும்.எங்களை பொறுத்தவரைக்கும் நிறைய கட்சிகள் எங்களுடைய கூட்டணியில் சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

அதற்காக மெகா கூட்டணி அமைத்து தமிழகத்தின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் வளர்ச்சிப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கும் புதிய திட்டங்கள் வருவதற்கும் மத்தியில் வலிமையான ஆட்சி அமைய வேண்டும் என எண்ணுகிறோம். தினகரன் 38 தொகுதிகளில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் போட்டியிடட்டும்; எங்களுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வீடு கட்டிய யானை; முதல்வர் சொன்ன கதை


சேலத்தில் நடந்த அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியபோது குட்டி கதை கூறினார். அதன் விபரம்: ஒரு காட்டில் தங்களுக்கான தலைவரை தேர்ந்தெடுக்க விலங்குகள் கூடி ஆலோசித்தன. அங்கிருந்த புலி தன்னையே தலைவராக தேர்ந்தெடுக்கும்படி கேட்டது. இதை மற்ற விலங்குகள் விரும்பவில்லை.

'எனக்கு எதிராக யார் வருவர் பார்க்கலாம்' என்றது புலி. அப்போது யானை எழுந்து புலிக்கு எதிராக போட்டியிட முன்வந்தது. உடனே மற்ற விலங்குகள் புலிக்கும், யானைக்கும் இடையே ஒரு போட்டி வைத்தன. அதன்படி காட்டின் வடக்கே புலியும், தெற்கே யானையும் ஒரு வீடு கட்ட வேண்டும்.
மறுநாள் மாலைக்குள் யார் கட்டி முடிக்கிறாரோ அவரே அந்த காட்டின் தலைவன் என்று அறிவித்தன. உடனே இரு விலங்குகளும் தங்கள் பணிகளை துவக்கின.யானை தன் பணியை மெதுவாகவும் அமைதியாகவும் செய்தது. புலி வேகமாக பணியை துவக்கியது. வீடு பாதி அளவு வந்து விட்டது. அப்போது யானை கட்டிய வீடு தரை மட்டத்துக்கு மேல் தான் வந்திருந்தது.
இதை அறிந்த புலி 'யானை மெதுவாக தான் செய்யும். வீடு கட்ட இன்னும் காலம் உள்ளது. நாம் விரைவில் முடித்து விடுவோம்' என்று நினைத்தது.அதனால் சிறிது நேரம் ஆட்டம் பாட்டங்களில் ஈடுபட்டது. ஆட்டத்தில் மெய்மறந்த புலி வீடு கட்டுவதை மறந்தது. யானை மெதுவாக பணிபுரிந்தாலும் தனக்கு அளிக்கப்பட்ட நேரத்துக்குள் வீட்டை கட்டி முடித்தது. இதை மற்ற விலங்குகளுக்கும் தெரிவித்தது.
அப்போது தான் புலிக்கு வீடு கட்டும் நினைவே வந்தது. புலி குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டாததால் யானையை காட்டின் தலைவனாக மற்ற மிருகங்கள் அறிவித்தன. ஆரவாரம் இல்லாத யானையிடம் அடாவடியான புலி தோற்றுப் போனது. யார் யானை யார் புலி என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pazhaniappan - chennai,இந்தியா
26-பிப்-201918:49:18 IST Report Abuse

pazhaniappanஅப்படியே மெய் சிலிர்க்கிறது, காரணம் ஓன்று எவ்வளவு திட்டினாலும் அது பிரச்சனையில்லை என்று சொன்னது , இரெண்டாவது என்ன அற்புதமான கதை

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
26-பிப்-201915:46:21 IST Report Abuse

பாமரன்நாட்டு நடப்பை வச்சி பார்க்கும்போது எனக்கென்னமோ புலி-யானை கதை பாஜக-காங்கிரஸ் மனசுல வச்சி சொல்லியிருப்பாரோன்னு தோணுது... நம்ம எடுபுடிக்கு அவ்ளோ ஞானம் வந்துடுச்சா என்ன...??? ஐநூறு முறை இதே கதையை சொல்ல சொன்னால்...ஒண்ணுமில்லைங்க ...வீடு (ஆடு களவு போன) கட்டுன போட்டி நடந்த மாதிரி கனவு கண்டேன்... அப்பிடின்னு சொன்னாலும் சொல்வார்...

Rate this:
Suri - Chennai,இந்தியா
26-பிப்-201915:16:16 IST Report Abuse

Suri5 க்காக லோல்பட்டு இந்த ஊழல் ஆட்களை தூக்கி பிடித்துக்கொண்டிருக்கிறார்.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X