பொது செய்தி

இந்தியா

உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் வரும் 6ம் தேதி போராட்டம்

Added : பிப் 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுச்சேரி:காலி பணியிடங்களை தகுதியான துப்புரவு ஊழியர்களை கொண்டுசீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனஉழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் நல சங்கம் சி.என்.டி.யு., மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. உழவர்கரை நகராட்சி அலுவலக பூங்கா எதிரில் நடந்த கூட்டத்தில், கவுரவ தலைவர் வீரமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.கூட்டத்தில்ஏழாவது ஊதியக் குழு நிலுவை தொகை, உயர்த்தப்பட்ட பஞ்ச படியை வழங்க வேண்டும். நகராட்சி துப்புரவு ஊழியர்களுக்கு புதுச்சேரி பொதுப்பணித் துறையில் வழங்கப்படுவது போல் 1-09-1993 முன் தேதியிட்டு, தற்காலிக அந்தஸ்து உத்தரவினை வழங்கி சம்பள உயர்விற்கான நிலுவை தொகை வழங்கிட வேண்டும்.கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு பணி நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வர வேண்டும்.கடந்த 2015ம் ஆண்டு உள்ளாட்சித் துறை வெளியிட்ட பென்ஷன் சம்பந்தமான உத்தரவினை அமல்படுத்தி அவர்களுக்கு இ.பி.எப்., சேமிப்பு தொகை பிடித்தம் செய்ய வேண்டும். நகராட்சி காலி பணியிடங்களை தகுதியான துப்புரவு ஊழியர்களை கொண்டுசீனியாரிட்டி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி வழங்கிட வேண்டும். இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் துப்புரவு ஊழியர் பணியினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 6 ம் தேதி உழவர்கரை நகராட்சி முன் கண்டன போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.சங்க பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-பிப்-201909:07:18 IST Report Abuse
Srinivasan Kannaiya முதல்வரே தர்ணா இருக்கும் பொழுது இவர்கள் போராட்டம் செய்வதில் தப்பில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X