பொது செய்தி

இந்தியா

தேசப்பற்றை உருவாக்க வேண்டும் சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்

Added : பிப் 25, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவையின், 88வது சிந்தனையரங்கம், ஜோதி கண் பராமரிப்பு மையத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, துணை செயலர் பிச்சமுத்து வரவேற்றார். தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் புலவர் பட்டாபிராமன், துணைத் தலைவர்கள் தியாகு, மண்ணாங்கட்டி, பொருளாளர் மணிமேகலை முன்னிலை வகித்தனர்.இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அகிலன், 'மக்களும் வங்கிகளும்' என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.தொடர்ந்து, ' வான் சிறப்பு' என்ற தலைப்பில், ஊடக செயலர் பைரவி தலைமையில் கவியரங்கம் நடந்தது. இதில், பங்கேற்று கவிதைகள் வாசித்த படைப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.கூட்டத்தில், புதுச்சேரியில் கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே சுமூகமான உறவு ஏற்பட்டு மக்கள் நலத்திட்டங்கள், வேலை வாய்ப்பு குறித்ததிட்டங்களை 2019-20 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றிட வேண்டும்.காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் தேசப்பற்றை உருவாக்க வேண்டும்.புதுச்சேரி வானொலி நிலைய முதன்மை அலை வரிசையை மத்திய அரசு பண்பலை அலை வரிசையாக மாற்றும் பணியை தொடங்கிட வேண்டும். அரும்பார்த்தபுரம் மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.துணை செயலர் உமாபதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X