பொது செய்தி

இந்தியா

வீட்டில் துாங்கிய பெண் தீயில் கருகி பலி

Added : பிப் 25, 2019
Advertisement

கண்டமங்கலம்:நள்ளிரவில் கூரை வீடு தீப்பற்றி எரிந்ததில் பெண் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள நவமால்மருதுார் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், விவசாய தொழிலாளி, இவரது மனைவி விஜயா,58; இவர்களுக்கு, மணிகண்டன் (எ) ரஞ்சித், ராஜ்குமார், முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.விஜயா தனது பேரக்குழந்தைகள் முகேஷ்,14, விஷாலி 12; ஆகியோருடன் புதிதாக கட்டியுள்ள கான்கிரீட் வீட்டிற்கு பின்புறம் உள்ள பழைய கூரை வீட்டில் துாங்குவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு பேரக்குழந்தைகள் புதிய வீட்டில் துாங்கிவிட்ட நிலையில், விஜயா மட்டும் கூரை வீட்டில் துாங்கியுள்ளார். நள்ளிரவில் மின்கசிவு காரணமாக கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. அதனைக் கண்டு அவ்வழியே சென்றவர்கள், வீட்டினுள் சிக்கிய விஜயாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் உடல் கருகி இறந்தார்.இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X