பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் கியுலக்ஸ் கொசுக்கள் அதிகரிப்பு வெக்டார் ஊழியர்கள் ஆய்வுக்கு சேகரிப்பு கியுலக்ஸ் கொசுக்கள் அதிகரிப்பு வெக்டார் ஊழியர்கள் சேகரிப்பு

Added : பிப் 25, 2019
Advertisement
 புதுச்சேரியில் கியுலக்ஸ் கொசுக்கள் அதிகரிப்பு வெக்டார் ஊழியர்கள் ஆய்வுக்கு  சேகரிப்பு கியுலக்ஸ் கொசுக்கள் அதிகரிப்பு வெக்டார் ஊழியர்கள்  சேகரிப்பு

புதுச்சேரி:புதுச்சேரியில் அதிகரித்துள்ள யானைக்கால் நோயை பரப்பும் 'கியுலக்ஸ்'கொசுக்களை, வெக்டார் ஊழியர்கள் ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.கோரிமேட்டில் உள்ள நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் புதுச்சேரி மாநிலத்தில் கொசுக்களால் பரவும் நோய்க்கான காரணத்தை கண்டறிந்து மாநில அரசுக்கு உதவி வருகிறது.டெங்கு, சிக்குன் குன்யா, யானைக்கால், மலேரியா, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்றவற்றை பரப்பும் கொசு இனங்களை பிடித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இந்த கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது, இவற்றினால், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது, தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்துகளை கண்டறிய ஆலோசனை அளித்து வருகிறது.டெங்கு பாதிப்பு அதிகம் காணப்பட்ட இடங்களில் முகாமிட்டு கொசுக்களை பிடித்து ஆராய்ச்சி செய்கிறது. இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைந்த நிலையில் தற்போது கொசுக்களை பிடித்து வெக்டர் ஊழியர்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்க உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு கொசுக்களை பல்வேறு வளர் நிலைகளில் பிடித்து வருகின்றனர்.வெயில் தாக்கத்தால் டெங்கு, மலேரியாவை பரப்பும் கொசுக்கள் குறைந்த நிலையில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் யானைக்கால் நோயை பரப்பும் 'கியுலக்ஸ்' கொசுக்கள் இருந்தன. அவற்றை பிடித்து ஊழியர்கள் ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.இதுகுறித்து ஊழியர்கள் கூறும்போது கொசுவை கட்டுப்படுத்த மருந்து தெளித்தாலும், அவை எதிர்ப்பு சக்தி பெற்று விடுகின்றன.எனவே ஏ.டி.எஸ்., கியுலக்ஸ் உள்ளிட்ட கொசுக்கள் பிடித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. தட்பவெப்ப சூழ்நிலை மாறும்போது, அவற்றின் எதிர்விளைவு எப்படி இருக்கின்றது என்று ஆய்வு நடக்கிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X