பாடம் நடத்தறாரு கலெக்டரு... | Dinamalar

பாடம் நடத்தறாரு கலெக்டரு...

Added : பிப் 25, 2019
Share
அ ன்றைய நாளிதழ்களை ஒன்றொன்றாக புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.'ஷாப்பிங்' சென்றிருந்த மித்ரா, ''உஸ்ஸ்...'' என்றவாறு உள்ளே நுழைந்தாள்.''அக்கா, வெயில் வாட்டி எடுக்குது; வெளியே நடமாட முடியலை,'' என்றவாறு சோபாவில் பொத்தென அமர்ந்தாள்.ஜூஸ் கொடுத்து உபசரித்தாள் சித்ராவின் தாய்.அதை பருகியபடி சித்ராவிடம், ''என்ன... ரொம்ப நேரமா ஆராய்ச்சி? நியூஸ் பேப்பர்ல அப்படி
 பாடம் நடத்தறாரு கலெக்டரு...

அ ன்றைய நாளிதழ்களை ஒன்றொன்றாக புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.'ஷாப்பிங்' சென்றிருந்த மித்ரா, ''உஸ்ஸ்...'' என்றவாறு உள்ளே நுழைந்தாள்.''அக்கா, வெயில் வாட்டி எடுக்குது; வெளியே நடமாட முடியலை,'' என்றவாறு சோபாவில் பொத்தென அமர்ந்தாள்.ஜூஸ் கொடுத்து உபசரித்தாள் சித்ராவின் தாய்.அதை பருகியபடி சித்ராவிடம், ''என்ன... ரொம்ப நேரமா ஆராய்ச்சி? நியூஸ் பேப்பர்ல அப்படி என்னதான் எழுதியிருக்காங்க...'' என கேட்டாள் மித்ரா.''நம்மூருக்கு புது கலெக்டரு, மாநகராட்சிக்கு புது கமிஷனரு, டெபுடி கமிஷனரு வந்துருக்காங்க. கார்ப்பரேஷனுக்கு நியமிச்சிருக்குற ரெண்டு அதிகாரிகளும் இளம் ரத்தம்; வேகம் ஜாஸ்தியா இருக்காம். புது கலெக்டர், அனுபவஸ்தரு; எந்த வேலைய எப்படி செய்யணும்னு, சக அதிகாரிகளுக்கு பொறுமையா சொல்லிக் கொடுக்குறாராம். அதே நேரத்துல, கண்டிப்பா நடந்துக்கிறாராம். பொதுமக்களுக்கு தேவையான வசதிய செஞ்சு கொடுக்கலைன்னா, 'சஸ்பெண்ட்' உத்தரவு தேடி வரும்னு சொல்லியிருக்காரு...'' என்றாள் சித்ரா.''ஓகோ...''தொடர்ந்த சித்ரா, ''ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிக்கு போயிருக்காரு... ரொம்ப மோசமா இருந்துருக்கு...'' என்றாள்.''அப்படியா... அந்த விடுதிக்குள்ள நுழையறதுக்கே அதிகாரிங்க பயப்படுவாங்களே... அப்ப, 'தில்'லான கலெக்டர், நம்மூருக்கு கெடைச்சிருக்கான்னு சொல்லுங்க...'' என்றாள் மித்ரா.''தில்லு மட்டுமில்ல... மனிதநேயமும் அவர்கிட்ட இருக்கு. வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்துச்சு. ஒரு விவசாயி, தன்னோட நிலத்தை கையகப்படுத்துனதுக்கு நிதி கேட்டாரு. சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரிச்சப்ப, கலெக்டரே அதிர்ச்சியாயிட்டாரு. 29 வருஷத்துக்கு முன்னாடி நிலம் கையகப்படுத்தி இருக்காங்க; இன்னைக்கு வரைக்கும் இழப்பீடு கொடுக்கலை. 43 ஆயிரம் ரூபா தயாரா இருக்குன்னு, அந்த அதிகாரி, கூலா பதில் சொன்னதால, கோபத்தின் உச்சிக்கே போயிருக்காரு கலெக்டர்...''''அப்புறம்... என்ன நடந்துச்சு'' ஆவலுடன் கேட்டாள் மித்ரா.''பொறுமையா இரு, முழுசா சொல்றேன்... 29 வருஷத்துக்கு முன்னாடி நிலத்தை எடுத்துட்டு, இன்னும் பணம் கொடுக்காம இருக்கறது தப்பு; அதுவும், 43 ஆயிரம் ரூபாதான் கொடுப்போம்னு சொல்றதும் தப்புன்னு சொல்லி, இப்பிரச்னையை தனியா, 'டீல்' பண்றதுக்காக, பைலை அவரோட டேபிளுக்கு எடுத்துட்டு போயிருக்காரு... இதே மாதிரி, விவசாயிகளோட ஒவ்வொரு பிரச்னையையும் கேட்டு, அதிகாரிகள 'லெப்ட் அண்டு ரைட்' வாங்கியிருக்காரு...'' என்றாள் சித்ரா.''ம்ம்ம்...கேட்க சந்தோஷமா இருக்கு''தொடர்ந்த சித்ரா, ''மாவட்ட நிர்வாகம் மேல விவசாயிகளுக்கு, இப்பதான் ஓரளவு நம்பிக்கை வந்துருக்கு... கூட்டம் முடிஞ்சதும் வாயார புகழ்ந்துட்டு போனாங்களாம்...'' என்றாள்.அதற்கு மித்ரா, ''அப்ப, இனியாவது நம்மூர்ல 'டெவலப்மென்ட் ஒர்க்' வேகமா நடக்கும்னு சொல்லுங்க...''என்றாள்.''நிச்சயமா... கார்ப்பரேஷன் அதிகாரியும், அதைத்தான் சொல்லியிருக்காரு...''''ஆமா, அவரும் புதுசுதானே... அவரு எப்படி? 'நெகடிவ்'வா சில பேரு சொல்றாங்களே...'' என கேட்டாள் மித்ரா.''பொறாமையால, எடுத்து விடுற கட்டுக்கதை...கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள இப்ப நடந்துக்கிட்டு இருக்கற, வேலை எதுவுமே அவருக்கு திருப்தியா இல்ல. அதிகாரிகளும் வேகமா இல்ல. கோயமுத்துார் நடைமுறைய ஒரு மாசம், 'அப்சர்வ்' பண்ணப் போறாராம். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் வரும்னு சொல்றாரு. ஆறு மாசத்துக்குள்ள, உங்களுக்கே 'சேஞ்ச்' தெரியும்; அப்படி தெரியலைன்னா, எவ்ளோ மோசமா எழுதணுமோ, அவ்ளோ மோசமா திட்டி எழுதுங்கன்னு, பத்திரிகையாளர்கள்கிட்ட சொல்லியிருக்காரு...'' என்றாள் சித்ரா.''பரவாயில்லையே...''''லேடி அதிகாரிங்க அதிகாரத்துல இருந்தாலும், உருப்படியா வேலை செய்றதில்லையாமே...'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினாள் சித்ரா.''ஆமாக்கா, இன்ஜி., செக்ஷன்லயும், டவுன் பிளானிங் செக் ஷன்லயும் லேடி அதிகாரிங்க இருக்காங்க. ஒருத்தருமே உருப்படி இல்ல. பதவி கொடுக்கலைன்னு புலம்பிட்டு இருந்தாங்க; பதவி கொடுத்தா, 'சீட்'டுக்கே வர்றதில்ல; வேலையும் செய்றதில்ல. 'மெமோ' கொடுக்கறத தவிர வேற வழியில்லைன்னு உயரதிகாரிங்க சொல்றாங்க...'' என, பேசிக்கொண்ட நாளிதழை பார்த்தாள்.உடனே, ''பெங்களூரு ஜெயில்ல அந்த அம்மாவுக்கு, ஏகப்பட்ட வசதி செஞ்சு கொடுத்திருக்காங்க... படிச்சியா'' என, நாளிதழில் வந்திருந்த செய்தியை காட்டினாள்.அதற்கு சித்ரா, ''அவுங்கள மாதிரி, நீ சொன்ன லேடி அதிகாரியும் ஜெயிலுக்கு போக வேண்டியவங்கதான். லஞ்ச ஒழிப்புத்துறை கையும் களவுமா பிடிச்சும், தப்பிச்சிட்டாங்க... ஆமா... அம்மான்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. அரசியல் தகவல் ஒண்ணுமில்லையா'' என்றாள்.''எவ்வளவு வேணும்... தி.மு.க., கூட்டணியில, நீலகிரியில தி.மு.க., போட்டியிடுறது உறுதி; ராசாதான் வேட்பாளருன்னு உறுதியா சொல்றாங்க. கோயமுத்துார், பொள்ளாச்சி, திருப்பூருன்னு எந்த தொகுதியையும் காங்கிரஸ் விரும்பலை. திருப்பூர்ல மூணு தொகுதி, ஈரோடு பக்கம் வர்றதுனால, இ.கம்யூ., விரும்பல. அதனால, தி.மு.க., களமிறங்கப் போகுதாம்'' என்று அரசியலுக்குள் நுழைந்தாள் மித்ரா.''ஓகோ... அப்புறம்''''கோவைய ரெண்டு கம்யூ., கட்சிக்காரங்களும் கேக்கறாங்க. அஞ்சு முறை ஜெயிச்சிருக்கோம்; எங்களுக்கு தான் ஒதுக்கணும்னு, மா.கம்யூ.,காரங்க அடம் பிடிக்கிறாங்க. திருப்பூர் வேண்டாம்; கோவைய கொடுங்கன்னு, இ.கம்யூ.,காரங்க கேக்குறாங்க. ஆனா, ஏற்கனவே பதவி சுகம் அனுபவிச்சங்களையே, மறுபடியும் களத்துல இறக்கி விடப் போறாங்களாம்...''''அப்படியா''''ஆமா...அ.தி.மு.க., கூட்டணியில, கோவையையும், திருப்பூரையும் பா.ஜ., கேட்டுக்கிட்டு இருக்கு. கோவைய ஒதுக்க அ.தி.மு.க., தயாரா இருக்காம்; அ.ம.மு.க.,காரங்க போட்டியிடப் போறதுனால, திருப்பூரை கொடுத்தா, தொகுதி கைவிட்டு போயிடுமோன்னு பயப்படுது. அவிநாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துறதுனால, நீலகிரியில ஈஸியா ஜெயிக்கலாம்னு, கணக்கு போட்டிருக்காங்க. பொள்ளாச்சியில இப்பவே ஜெயிச்ச மாதிரிதான்...'' என்றாள் மித்ரா.''இப்பவே, லட்சக்கணக்குல பேரம் பேசிக்கிட்டு இருக்காங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.''அதுவா, அங்கீகாரம் இல்லாத ஸ்கூல் லிஸ்ட் தயார் பண்ணிக்கிட்டு இருக்காங்க. சில ஸ்கூல்ல அட்மிஷன் நடந்துக்கிட்டு இருக்கு. அதனால, லிஸ்ட் ரிலீஸ் பண்ணப் போறோம்னு சொல்லி, கரன்சி கேட்டு மிரட்டிக்கிட்டு இருக்காங்க. நர்சரி, பிரைமரி ஸ்கூல்காரங்க கிட்ட இருந்து, ஒரு 'ல'கரம் கேக்குறாங்களாம். மெட்ரிக் ஸ்கூல்காரங்கள்ட்ட, அஞ்சு லகரம் கேட்டு, பேரம் நடந்துக்கிட்டு இருக்காம்...'' என்றாள் மித்ரா.''கறுப்பு பேட்ஜ் அணிஞ்சு, பேராசிரியர்கள் போராட்டம் நடத்துனாங்களாமே...'' என கேட்டாள், சித்ரா.''போராட்டம் செஞ்ச வாத்தியார்களே அமைதியாகிட்டாங்க. அரசு உதவி பெறும் பள்ளிகள்ல வேலைபார்க்கற ஆசிரியர்கள் போராட்டத்துல ஈடுபட்டா, சம்பந்தப்பட்ட ஸ்கூல் அங்கீகாரத்தை புதுப்பிச்சு தரமாட்டோம்னு சொல்லிட்டாங்களாம். அதனால, அரண்டு போயிட்டாங்க. 'லெட்டர்பேடு' எடுத்துக்கிட்டு, கோரிக்கை அது, இதுன்னு யாருமே எஜூகேஷன் ஆபீஸ் பக்கம் வர்றதில்லையாம்'' என்றாள் மித்ரா.''ஆதரவு தெரிவிச்ச அரசு கல்லுாரி பேராசிரியர்கள், இப்ப போராட்டம் செய்றாங்க... இவுங்க கதி என்னாகுமோ...பொறுத்திருந்துதான் பார்க்கணும்'' என்றபடி எழுந்த சித்ரா, ''கொஞ்சம் வெயிட் பண்ணு. செம ஹாட். பத்தே நிமிஷத்துல குளிச்சிட்டு வந்துர்றேன்'' என்று பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X