பொது செய்தி

இந்தியா

ரூ.5 கோடியில் அருங்காட்சியகம்

Added : பிப் 25, 2019
Advertisement
 ரூ.5 கோடியில் அருங்காட்சியகம்

புதுச்சேரி:அரிக்கன்மேட்டில் ரூ.5 கோடியில் அருங்காட்சியகம், தகவல் மையம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று நடந்தது.முருங்கப்பாக்கம் கைவினை கிராமம் அருகில் நடந்த விழாவிற்கு ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.அரிக்கன்மேடு வரலாற்று சிறப்பு மிக்க இடம். இந்த இடத்தில் பல்வேறு வரலாற்று தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகமும், அதைப்பற்றிய தகவல் மையமும் அமைக்கப்படுகிறது.விழாவில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், சுற்றுலாத்துறை இயக்குனர் முகமது மன்சூர், துறை அதிகாரிகள், ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மரப்பாலம் துணை மின் நிலையத்தில் இருந்து அரியாங்குப்பத்திற்கு தனி மின் பாதை சுமார் ரூ.௧.௧௩ கோடி செலவில் அமைக்கும் பணியை முதல்வர் நாராயணசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X