கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
லஞ்சம் வாங்கினால், 'தூக்கு'
உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: 'அரசிடம் சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து, துாக்கில் போட வேண்டும். அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற, மதுரைக் கிளை அதிருப்தியை வெளியிட்டது.

லஞ்சம்,தூக்கு,உயர் நீதிமன்றம்,அதிருப்தி


மதுரை, சூர்யா நகர் பரணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக மின் வாரியத்தில், 325 உதவிப் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு, 2018 டிச., 30ல் எழுத்து தேர்வு நடந்தது. சென்னை அண்ணா பல்கலை, தேர்வை நடத்தியது. வினாத்தாள் வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அண்ணா பல்கலை விசாரணை நடத்தியது.

பின், அரசின் இணையதளத்தில் வினாத்தாள், கீ பதில்களுடன் தேர்வு முடிவுகள் வெளியாகின. 1,575 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன.

வினாத்தாள் வெளியானது பற்றி, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். தேர்வு மற்றும் நியமன நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.

* நீதிபதி கிருபாகரன்: தேர்வு முடிந்து, வினா மற்றும் விடைத்தாள்களை திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். இச்சூழ்நிலையில், எப்படி வினாத்தாள் வெளியானது? 120 வினாக்களைஞாபகம் வைத்து, ஒருவராக எழுதி வெளியிட முடியாது.

இம்முறைகேட்டிற்கு, அண்ணா பல்கலையைச் சேர்ந்த, ஏதாவது ஒரு ஊழியர் உடந்தையாக இருந்திருக்கலாம். அரசிடம்

Advertisement

சம்பளம் பெற்று, சிலர் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். லஞ்சம் அனைத்துத் துறைகளிலும் உள்ளது.

அரசிடம் சம்பளம் பெற்று, லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிய வேண்டும். துாக்கில் போட வேண்டும். அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். இதனால், லஞ்சம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

பின், நீதிபதிகள், 'இவ்விவகாரத்தில் தேர்வு நியமன நடைமுறைகள் தொடர்பாக, எவ்வித மேல்நடவடிக்கையும் அரசு மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது. விசாரணை, மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan.S - Chennai,இந்தியா
28-பிப்-201916:33:08 IST Report Abuse

Narayanan.Sஅப்படியானால் அரசுஊழியர்களில் பாதி பேர் தூக்குத்தான். எந்த விசாரணையும் தேவையில்லை அனைவரும் அறிந்ததே.

Rate this:
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
27-பிப்-201907:12:19 IST Report Abuse

Chanemougam Ramachandiraneவரவேர்பூம் முதலில் தாங்கள் வசங்கும் தீர்ப்பு மேல் முறையீட்டில் மாற்றும் ஏற்படுகிறது இதற்கு என்ன வழி என்றல் மாநிலத்தில் 3 ஓர் 5 நபர் கமிசிசின் அமைத்து குறைந்தது 5 அமைத்து அதற்கு இனிமேல் தனி நீதிபதி வசக்கைவிசாரணை செய்து குறிப்பு எடுத்து அதை அந்த கமிஷன் துறை வாரியாக வசக்கை நடத்தி தீர்ப்பு வசங்கனும் இவ்வாறாக இருந்தால் லஞ்சம், தவறான தீர்ப்புகள் ஒழியும் ஏன் பள்ளி மாணவர்கள் பேப்பரை யார் நிறுத்துகிறார் என்று தெரியாமல் நடை முறை படுத்துவதை போல் வசகுகளையும் எந்த நீதிபதி வசங்கினர் என்று தெரியாமல் வரையறுக்கலாமே அதற்கு ஒட்டு மொத்த இந்தியாவில் குழு ஏற்படுத்தி முறை படுத்தலாமே யார் செய்வது இதுவரை உச்ச நீதிமன்றம் வசங்கிய நல்ல தீர்ப்புகளை கூட lawcommission சட்டமாக இயற்றவில்லை கீசமை நீதிபதிகளுக்கு மாதம் ஒரு முறை ட்ரைனிங் கொடுத்து அவர்கள் up date படித்து தெரிந்து கொள்ள உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும் இது காலத்தின் கட்டாயம்

Rate this:
K.n. Dhasarathan - chennai,இந்தியா
26-பிப்-201922:04:09 IST Report Abuse

K.n. Dhasarathanஐயா அந்த தண்டனை எப்போ கொடுப்பீர்கள் ? தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும், அதுவும் அரசு அதிகாரியாக இருந்தால் மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அரசியல்வாதி அதை - லோகபாலை - கொண்டுவரமாட்டான் . நீதிபதி கொடுக்கும் தண்டனை ஒன்றே வழி. எனவே சிறு குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை கொடுங்க. ராணுவ நாடான பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஊழலில் சிக்கி உள்ளே இருக்கிறார், நம் ஜனநாயக நாட்டில் ஊழல்வாதி தைரியமாக வெளியில் சுற்றுகிறான். எனவே நீதிபதிகளே சிந்தியுங்கள்.

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-பிப்-201904:22:55 IST Report Abuse

Manianஅப்பா தசரதா : நீதிபதிகள் தண்டனை கொடுத்தாலும் அதை நிறைவேற்ற அரசியல், அரசாங்க வியாதிகள் செய்வார்கள்ல? சடடமே அவர்கள் கையில் இருக்கிறதே மக்களே சட்டத்தை கையெடுக்க வேண்டும். தர்ம அடி ஆரம்பமாகட்டும். ...

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X