கந்து வட்டிக்காரரிடம் கறக்கும் போலீசு... | Dinamalar

கந்து வட்டிக்காரரிடம் 'கறக்கும்' போலீசு...

Added : பிப் 26, 2019
Share
ப்படியிருந்தாலும், எம்.எல்.ஏ., தான் பயனாளிகளை தேர்வு செய்றாங்க,'' என்றவாறே, மொபைல் போனில் பேசியவண்ணம், மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா, வரும் போதே பேசிட்டு வர்றீங்க? என்ன விஷயம்?'' என்றாள் மித்ரா.''நீ என்ன இப்படி, விவரம் தெரியாதவளா இருக்கிறயே. ரெண்டு வருஷமா அப்படித்தானே நடந்துட்டு இருக்கு,''''நான் நேரில், பார்த்த பின்னர்தான், எனக்கே
 கந்து வட்டிக்காரரிடம் 'கறக்கும்' போலீசு...

ப்படியிருந்தாலும், எம்.எல்.ஏ., தான் பயனாளிகளை தேர்வு செய்றாங்க,'' என்றவாறே, மொபைல் போனில் பேசியவண்ணம், மித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.''என்னக்கா, வரும் போதே பேசிட்டு வர்றீங்க? என்ன விஷயம்?'' என்றாள் மித்ரா.''நீ என்ன இப்படி, விவரம் தெரியாதவளா இருக்கிறயே. ரெண்டு வருஷமா அப்படித்தானே நடந்துட்டு இருக்கு,''''நான் நேரில், பார்த்த பின்னர்தான், எனக்கே தெரியுதுக்கா. 'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்துல, 13 ஆயிரம் பேர் விண்ணப்பிச்சாங்க. அதுல, 3,580 பேருக்கு மானியம் கொடுத்திருக்காங்க.

'லைசென்ஸ்' இருக்கற பெண்கள் விண்ணப்பிச்சு, இன்னும் காத்திட்டு இருக்காங்க,'''' ஆனா, 'எல்.எல்.ஆர்.,' போட்டவங்கள தேர்ந்தெடுத்து, அவங்க 'லைசென்ஸ்' வாங்கட்டும்னு, காத்திருந்து மானியத்த கொடுக்கறாங்க''''பயனாளிகள் தகுதியான நபர்களான்னு பார்த்து, பட்டியல் தயாரிக்கறது மட்டும் தான் மகளிர் திட்டத்தோட வேலை. பட்டியல் தயாரானதும், தொகுதி வாரியா பிரிச்சு, எம்.எல்.ஏ., ஆபீசுக்கு அனுப்பிடறாங்க. பட்டியலில் செலக்ட் ஆன பயனாளி, எம்.எல்.ஏ., ஆபீஸ்ல போயி, 'பேசிட்டு' வரணும்''''எம்.எல்.ஏ., ஆபீசுல இருந்து 'டிக்' பண்ணி கொடுக்கறவங்களுக்கு மட்டும்தான் ஸ்கூட்டி, வாங்கிட்டு இருக்காங்க. என்னோட பிரெண்டும் அப்ளை பண்ணியிருந்தா, அத விசாரிக்க போனப்பத்தான் எனக்கே தெரிஞ்சுது. ஆபீசர்கள் சிலர், தங்களோட மச்சினிச்சிகளுக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.''ஆமாமா, அவங்க கையில அதிகாரம் இருந்தா, என்னவேணா பண்ணுவாங்க. இப்படித்தான், அக்ரி ஆபீசர்கள் ரொம்ப சங்கடப்படறாங்களாம்,''''எதுக்குங்க?''''சிறு, குறு விவசாயிகள், 1.40 லட்சம் பேர் இருக்காங்கனு, புள்ளியியல்துறை தகவல் கொடுத்தும், 40 ஆயிரம் பேர் மட்டும்தான், மத்திய அரசு திட்டத்தில், செலக்ட் ஆகியிருக்காங்க''''வேளாண்துறை அதிகாரிங்க மத்தியில், இத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு இல்லைனு பேசிக்றாங்க. முழுசா, வருவாய்த்துறை மட்டுமே பார்க்கறதால, விவசாயிகளை வரவழைத்து, படிவத்த எழுதி வாங்க முடியலைனு.
அப்புறம் இன்னொரு விஷயமும் இதில், இருக்குடீ''''அது, என்னக்கா?''''ஐந்து ஏக்கருக்கு மேல நிலம் இருந்தா, பணம் வராதுன்னு, ஒரே குடும்பத்துல, நாலு ஏக்கர் வீதம் பிரிச்சு எழுதி வச்சிருக்காங்க. 6 ஆயிரம் ரூபாய், கொடுக்கற மத்திய அரசு திட்டத்துல, குடும்பத்துக்கு ஒருத்தருக்கு மட்டும்தான் உதவி கொடுக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால தான், நம்ம மாவட்டத்துல விவசாயிகள் தேர்வு செய்யறதுல மந்தமாக இருக்கு,''''அதேமாதிரி, மாநில அரசு வழங்கற, 2 ஆயிரம் ரூபாய் திட்டம் எப்படி போகுது?''''உள்ளாட்சிகளில் இருந்த பி.பி.எல்., லிஸ்ட்ட பார்த்து, ஆளுங்கள தேடிப்போனப்ப, 50 சதவீதம் பேர் காணாம போயிட்டாங்க. பெயர் மட்டுமே முக்கிய ஆவணமா இருக்கறதால, மாநகராட்சியில, அ.தி.மு.க., வார்டு செயலாளர் வீட்டுல உட்கார்ந்து, அதே பேர்ல இருக்கற கட்சிக்காரங்க விவரத்த வாங்கி, பூர்த்தி செஞ்சு கொடுத்துட்டாங்க''''வார்டுக்குள்ள கட்சிக்காரங்களுக்கே அதிருப்தியாகிடுச்சுனு புகார் போனதால், எம்.எல்.ஏ.,க்கள் மேல பேசி, புதுசா படிவம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. மக்களுக்கு பணம் கிடைக்குதோ இல்லையோ. போட்டோ ஒட்டி, படிவத்த பூர்த்தி செஞ்சு கொடுத்தாவே எல்லாம் கிடைச்சிடும்னு நம்பறாங்க''''அதைய வச்சுத்தான், புதுசா படிவம் ரெடி பண்ணி விடுபட்ட கட்சிக்காரங்ககிட்ட விவரத்த வாங்கிட்டு இருக்காங்க.. என்றாள் சித்ரா.
''ஏய்... மித்து, ஜில்லுன்னு மோர் கொண்டுவா,''''இதோ ஒன் மினிட்,'' என்ற மித்ரா, சொன்ன மாதிரியே மோர் கொண்டு வந்தார். ஒரே மடக்கில் குடித்த சித்ரா, ''எலக் ஷனில் ஏதாச்சும் விசேஷம் இருக்கா?'' என்றாள்.''வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, ஒரு மாசம்தான் ஆச்சு... அதுக்குள்ள, சிறப்பு முகாம்ல இவ்வளவு பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுக்கறாங்களேனு, அதிகாரிங்க அசந்து போயிட்டாங்க'' என்றாள் சித்ரா.''அக்கா, நானொரு எலக்ஷன் நியூஸ் சொல்றேன் கேளுங்க. வாக்காளர் சேர்க்கறதில், கம்யூ., பா.ஜ., கட்சிக்காரங்களுக்கும் பெரிய போட்டியே நடக்குதாம். அதுதான் மேட்டர். வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் இருக்கறதால, அவங்களையும் பட்டியலில் சேர்க்கலாம்னு, தோழர்கள் களமிறங்கிட்டாங்க. தொழிற்சங்கத்துல சேர்த்து, அப்படியே ஓட்டு வங்கியா மாத்திடலாம்னு ஏற்பாடு நடந்துட்டு இருக்காம்''''எலக்ஷன் மாதிரியே, டிரஸரி ஆபீசர் செம கலெக்ஷன் பார்க்குறாராமா?''''அந்த மாதிரி விஷயமெல்லாம், உங்க காதுக்குத்தானே வரும்,''''இப்படியே ஐஸ் வைக்காதடி. திருப்பூரிலுள்ள டிரஸரி ஆபீசில், சம்பள பில் பாஸ் செய்து வாங்குவதற்குள் அரசு ஊழியர்கள் படாதபாடு படறாங்களாம்,''''அமைதிக்கு பெயர் பெற்ற 'சாந்த'மான ஒரு ஆபீசருக்கு கமிஷன் வெட்டினால்தான் கருவூல கதவே திறக்குதாம்.
இதை தெரிஞ்சுகிட்ட அதிகாரிகள் கூட கடுப்பில் இருக்காங்களாம். ஓ.ஏ.பி., கேட்டு, மாதம் தோறும் பில் அனுப்பினால், அதுக்கும் 'கமிஷன்' வெட்டுன்னு சொல்றாங்களாம்.''இதனால், கோபப்பட்ட அதிகாரிகள் சிலர், கலெக்டரிடம் சொல்றதுக்கு ஒரு நல்ல நாள் பார்த்துட்டு இருக்காங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''அதுவும் சரிதான். சொன்னதான் சரிப்பட்டு வருவாங்க,'' என மித்ராவும் ஆமோதித்தாள்.''ஏங்க்கா, இந்த தடவை ஜெ., பிறந்த நாளை அமர்க்களமா கொண்டாடுனாங்க பார்த்தீங்களா?''''ஆமாண்டி மித்து. நானும் பார்த்தேன். எங்க பார்த்தாலும், கட்சி கொடி, தோரணம், பாட்டுன்னு, ஜெ., படம் வைச்சு, பூ டெக்ரேஷன் பண்ணி பட்டைய கிளப்பிட்டாங்க. ஏன்.. இப்படின்னு விசாரிச்சா, சிறப்பா கொண்டாட சொல்லி 'சிறப்பா' கவனிச்சாங்களாம்''''ம்.. அதானே பார்த்தேன். எலக்ஷன் வேற வருது. அதனால, தொண்டர்களை உற்சாகமாக வைக்கறதுக்கான 'டெக்னிக்' இது. என்னக்கா, நான் சொல்றது கரெக்ட்தானே,''''100 பர்சென்ட் கரெக்ட் மித்து,'' என்று சொன்ன சித்ரா, தண்ணீர் குடித்து விட்டு, ''அப்பப்பா... என்னடி வெயில் இப்படி கொளுத்துது. அடுக்குமாடி வீடா இருந்தாக்கூட, கொஞ்சம் காத்து வரும்,''''அக்கா... நீங்க அடுக்குமாடி சொன்னதும், போலீஸ் குவார்ட்டர்ஸ் மேட்டர் நினைவுக்கு வந்துடுச்சு,''''ஏன்... அங்கென்ன பிரச்னை?''''பிரச்னை இல்லீங்க.
போலீஸ்காரங்களுக்கு வீடு ஒதுக்குவதில், ஒரு அதிகாரி இஷ்டத்துக்கு பணத்தோட விளையாடிட்டாராம். சம்பந்தப்பட்ட செக்ஷன் அலுவலர்களும் இதுக்கு உடந்தையாம். சீனியாரிட்டி, சம்பளம், குடும்பச் சூழல்... இப்படின்னு பார்த்துட்டு, வீடு ஒதுக்காம, தன்னை 'கவனிச்ச' ஆட்களுக்கு மட்டும் நல்ல வீடாக கொடுத்துட்டாராம்,''''அட... பாவமே!''''இதிலென்ன கொடுமைன்னா,
இன்னும் சிலர் போய் கேட்டதற்கு, ''பார்ம் கொடுத்தீங்களா? அதை காணோமே,''ன்னு அலட்சியமாக பதில் சொல்றாராம். இந்த விஷயத்தில், புதுசா வந்திருக்கிற மேலதிகாரிதான், நடவடிக்கை எடுக்கோணும்,''அப்போது சித்ராவின் மொபைல்போன் ஒலிக்கவே, ''பிரபாகரன், நாளைக்கு மறக்காம, ஆடிட் ரிப்போர்ட் எடுத்துட்டு, அப்பா வரச்சொன்னார்,'' என்று பேசிவிட்டு வைத்தாள்.''கிடைச்சதிலெல்லாம், பணம் சுருட்டறதுனு முடிவோட இருக்றவங்களை என்னன்னு சொல்றது. அக்கா, இதே மாதிரி இன்னொரு சுருட்டலை நான் சொல்றேன், கேளுங்க,''''எங்கே.. என்ன... எப்படி?''''அக்கா... ஆண்டிபாளையத்தில், சரக்கு ஆட்டோவில் ஒரு சிலர் பணம் வைச்சு, சீட்டாட்டம் ஆடியிருக்காங்க.
சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் 'குட்டி' அதிகாரி போய், எல்லாரையும் பிடிச்சுட்டு வந்து கேஸ் போட்டாராம்,''''அப்புறமென்ன.. சரியாதானே நடந்துகிட்டார்''''இனிமேதான், விஷயம் வருது, கேளுங்க. அவங்களை ஸ்டேஷனில் விடுவிக்கவும், வண்டியை கொடுக்கவும், சில, பல ஆயிரங்களை சத்தமே இல்லாமல் 'கறந்துட்டாராம்'. இதேமாதிரி அவர், தினம்தினம், 'பல்க்'கா பணத்தை பார்க்கலைன்னா துாக்கமே வராதாம்,''''இத்தனைக்கும், கண்ணனோட இன்னொரு பேரை வச்சிகிட்டு, அவர் ஆடுற ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லையாம்.
ம்...ம்... இந்த பூனைக்கு மணி கட்டுற ஆளு யாருன்னு தெரியலையே,''என்றாள் மித்ரா.''அடி.. மித்து. 'மூர்த்தி' சின்னதா இருந்தாலும், கீர்த்தி பெரிசு'ன்னு கிராமத்தில ஒரு பழமொழி சொல்லுவாங்க. அதுமாதிரி, ரூரல் எல்லையில் இருக்கிற குன்னத்துார் ஸ்டேஷனில், பெரிய அதிகாரி பண்ற 'அலப்பறையை' கேட்க ஆளில்லையாம்,''''அக்கா.. அங்க அப்படி என்ன நடக்குது?''''சமீபத்தில், ஒரு நுால் வியாபாரி, 12 ரூபாய் வட்டிக்கு, நாலு லட்சம் கடன் வாங்கியிருக்காரு. அந்த கந்து வட்டிக்காரருக்கு சரியான முறையில், வட்டி கொடுக்க முடியலை. அதுக்கு ஈடா, அவர் கொடுத்த பத்திரத்தை, தன்னோட பேருக்கு கிரயம் பண்ணிட்டாரு,''''அதனால, வேதனைப்பட்ட போலீசில் கேஸ் கொடுத்தாரு. நம்ம 'தவ'மான அதிகாரி, கந்து வட்டிக்காரன்கிட்ட, 'மீட்டரை' போட்டுட்டாரு.
அதேநேரத்தில, ரொம்ப நொடிஞ்சுபோன நுால் வியாபாரி, தன்னோட மனைவியுடன் விஷம் குடிச்சிட்டார்,''''அய்யய்யோ, அப்புறம் என்னாச்சுங்க்கா?''''டீரீட்மென்டில, அவரோட மனைவி இறந்துட்டாங்க. இவரு பிழைச்சுட்டாரு. இந்த மாதிரி அலட்சிய போலீசால்தான், பிரச்னையே வருது. அதுவும் அந்த அதிகாரி, 'மணி'யை வாங்கி, 'தவமா.. தவமிருக்காராம்,''''அங்க அப்படின்னா.. இங்க இப்படி நடக்குது,''மித்ரா சொன்னதும், ''என்ன மேட்டர்?''சித்ரா ஆர்வமானாள்.''மங்கலத்துக்கு பக்கத்துல, வேலாயுதம்பாளையத்தில், மூவர் கும்பல், வீட்டுக்குள்ளயே மதுபாட்டில் பதுக்கி வைச்சிட்டு, தறி ஓட்டுற தொழிலாளிக்கு கொள்ளை லாபம் வைச்சு விக்கறாங்களாம்,''''அதுவும், போன் செஞ்சா, சரக்கு டெலிவரியாம். வாங்கி வாங்கி, வயிறு முட்ட குடிச்சிட்டு, வேலைக்கே போறதில்லையாம்.
இதனால, அந்த வீடுகளில் எப்பவும் சண்டைதானாம்,''''ஏக்கா... பெண்ணோட கஷ்டம் ஒரு பெண்ணுக்குதான் தெரியும்னு சொல்றாங்க. நமக்கு தெரியுது. தெரிய வேண்டியவங்களுக்கு தெரிஞ்சா சரிதான்,'' என்று மித்ரா சொன்னதும், ''சபாஷ், கரெக்டா சொன்ன,'' என்று சொன்ன சித்ரா, ''ஓ.கே.,ப்பா. நான் கெளம்பறேன். நாளை மறுநாள், அவிநாசியில் நடக்கற, அத்திக்கடவு ---- அவிநாசி திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு, போலாம். ரெடியா இரு,'' என்று பேசியவாறே வண்டியை நோக்கி நகர்ந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X