பொது செய்தி

இந்தியா

அமேசான், ஓலாவை முன்னரே கணித்த காந்தி

Updated : பிப் 26, 2019 | Added : பிப் 26, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement

புதுடில்லி : இணையளத்தின் உதவியால் ஆர்டர் செய்த உடன், உணவு. நவநாகரீக ஆடைகள், பயணத்திற்கு என சொகுசு கார்கள் என மக்களின் வாழ்க்கை முறைகள் பெரிதும் மாற்றமடைந்துள்ளதை 109 ஆண்டுகளுக்கு முன்னரே மகாத்மா காந்தி கணித்து ஹிந்த் சுவராஜ் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news



காந்தி, ஹிந்த் சுவராஜ் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் :

எதிர்காலத்தில், மனிதர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய கைகள் மற்றும் கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியமிருக்காது. ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம், அவர்களின் பல்வேறு விதமான தேவைகள் பூர்த்தியாகும். ஒரு பட்டனை அழுத்தினால், அவர்களுக்கு நவநாகரீக உடைகள் கிடைக்கும். மற்றொரு பட்டனை அழுத்தினால், அன்றாட நிகழ்வுகளை தெரிவிக்கும் செய்தித்தாள்கள் அவர்களது கைகளிலேயே தவழும். அவர்கள் பயணம் செய்வதற்காக கார், இருசக்கரவாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். விதவிதமான உணவு வகைகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்வர். இவைகளெல்லாம், ஒரு இயந்திரத்தின் உதவியால், சாத்தியமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news


பிரிட்டிஷ் அரசியல் விஞ்ஞானி டேவிட் ருஞ்சிமேன், தனது புத்தகமான How Democracy Ends புத்தகத்தில் இன்டர்நெட்டின் வயது, அது எவ்வாறு உலகத்தை இணைக்கப்போகிறது என்பது குறித்து குறிப்பிடுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்னர் காந்தி எழுதிய ஹிந்த் சுவராஜ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளார்.


இதுதொடர்பாக, டேவிட் ருஞ்சிமேன் கூறியதாவது,

இன்டர்நெட்டை தான் கண்டுபிடித்துவிட்டதாக அல் கோர் சொன்னபோது, மக்கள் அனைவரும் அவரை பார்த்து எள்ளிநகையாடினர். அந்தளவிற்கு முன்னேற்றம், தொழில்நுட்பம் வளர்ச்சிபெறும் என்பதில் மக்களுக்கு சிறிதும் நம்பிக்கையில்லாத சூழ்நிலையை அப்போது நிலவி வந்தது.

இன்டர்நெட்டை கண்டுபிடித்தது அல் கோர் ஆக இருக்கலாம், ஆனால், இன்டர்நெட் பயன்பாடு குறித்து 100 ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்திருந்தது இந்தியாவை சேர்ந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தான் என்று ருஞ்சிமேன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
04-மார்-201906:37:09 IST Report Abuse
கதிரழகன், SSLC ஒரு பொத்தானை தட்டி விட்டா தட்டு நெறைய இட்டிலி பக்கத்தில் சட்டினி வந்திடனும் ன்னு விஞ்ஞானத்தை வழக்க போறேண்டி ன்னு பாடின என் எஸ் கிருஷ்ணனை விட்டுடீங்க
Rate this:
Cancel
skv - Bangalore,இந்தியா
26-பிப்-201917:15:46 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஓலா உப்பேர் எல்லாம் வசதியாவே தான் இருக்கு சாமானியன்களும் ட்ரேவள் பண்றதுக்கு முதுமையே கொடுமை அதுலே பயனம் போவது பஸ்லே போகவே முடியாதுன்ற நிலைமை காந்தியோ நேருவோ இப்போது மக்கள் பலருக்கு யூஸ் ஆவுதே நன்றி என்பேன் சமீபத்துல சென்னை சென்றேன் ஓளாலேயே எல்லா இடங்களும் என் மகன் அழைச்சுண்டு போயிட்டான் பஸ்லே என்றால் நிஸ்ச்சயம் இயலாது
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
26-பிப்-201916:34:23 IST Report Abuse
Jaya Ram காந்தியும் ஒரு சுயநலவாதியே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X