போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி சாராய வியாபாரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

Added : பிப் 26, 2019 | |
Advertisement
சேலம்: போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி, சாராய வியாபாரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள புளியமரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.சேலம், பொன்னம்மாபேட்டை, கார்ப்பட்தெருவை சேர்ந்த ராஜ சேகரன், 40, மீது அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில், 10க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து

சேலம்: போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி, சாராய வியாபாரி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள புளியமரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
சேலம், பொன்னம்மாபேட்டை, கார்ப்பட்தெருவை சேர்ந்த ராஜ சேகரன், 40, மீது அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில், 10க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தான். இதை கண்டித்து, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, ராஜசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த அவன், தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டு வந்தான். இதனால், போலீசார் அவனை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். மது விற்பனையில் ஈடுபட முடியாமல் தவித்த அவன், நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் கொசு மருந்துடன் வந்தான். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததால், அஸ்தம்பட்டி சாலையில் உள்ள புளியமரத்தில் மளமளவென ஏறி, உச்சிக்கு சென்று விட்டான். பின்னர் அங்கிருந்தபடி, குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தான். அங்கிருந்த டவுன் போலீசார், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள், ஏணியை மரத்தில் வைத்து ஏறிய நிலையில், தான் கையில் வைத்திருந்த கொசு மருந்தை குடித்து விட்டான். பின்னர், அவன் மரத்தில் இருந்து குதித்து விடாதபடி, ஆசை வார்த்தைகளை கூறி அவனை இறக்கினர். அவன் மயங்கி விழவே, அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X