பொது செய்தி

இந்தியா

பாக்.,பயங்கரவாதிகள் மீது இந்தியா அதிரடி தாக்குதல்

Updated : பிப் 26, 2019 | Added : பிப் 26, 2019 | கருத்துகள் (290)
Share
Advertisement
பாகிஸ்தான், இந்தியா, விமானப்படை, தாக்குதல்

புதுடில்லி: காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தது. கடந்த பிப் 14 ல் இந்திய ராணுவ வீரர்கள் சென்ற கான்வாயில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியா இன்று மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த தாக்குதலுக்கு தேச பற்றுடன் அனைத்து தரப்பினரும் பாராட்டி வீரர்களுக்கு சல்யூட் அடித்து வருகின்றனர்.


கடந்த 14ம் தேதி, காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு கண்டனம் எழுந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.


latest tamil news

1000 கிலோ வெடி குண்டு வீச்சு

இந்நிலையில், இன்று(பிப்.,26) அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை விமானங்கள், இந்திய, பாக்., எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் இந்திய விமானப்படை 1000 கிலோ வெடி குண்டுகளை வீசியுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலகோட் பகுதியில் செயல்படும், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 பேர் கமாண்டோக்கள் ஆவர்.

தாக்குதல், திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்துள்ளதாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த தாக்குதலை அடுத்து இருநாட்டு உயர்நிலை குழுவினர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்திய முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


முகாமில் அழிந்த முக்கிய புள்ளி


பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடந்த தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
மசூத் அசாரின் மைத்துனர் யுசூப் அசார் மற்றும் முக்கிய கமாண்டோக்கள், பல ஆண்டுகள் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், பயிற்சியாளர்கள், கொல்லப்பட்டனர். இந்த பயிற்சி முகாமை, பயங்கரவாதி மசூத் அசாரின் மைத்துனரான மவுலானா யுசூப் அசார் நடத்தி வந்துள்ளான். இன்றைய தாக்குதலில் யுசூப் அசாரும் கொல்லப்பட்டான். மேலும் மசூத் அசாரின் சகோதரரான மவுலானா தல்கா சாகிப்பும் கொல்லப்பட்டுள்ளான்.http://www.dinamalar.com/kashmir-terror-attack.asp

Advertisement
வாசகர் கருத்து (290)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.P SARATHI - chennai,இந்தியா
27-பிப்-201915:16:54 IST Report Abuse
K.P  SARATHI இந்தியாவுக்குள் தீவிரவாதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் ஓட்டு வங்கி குறைந்து விடும் என்று இரு கட்சிகளும் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன மேலும் இது சிறுபான்மையர்க்கு எதிரானது என்ற கோஷம் வேறு
Rate this:
Cancel
Suresh Bindhumadhav - Tripoli,லிபியா
27-பிப்-201901:03:51 IST Report Abuse
Suresh Bindhumadhav இந்த ஒரு தாக்குதலால் பாக்கிஸ்தான் தீவிர வாத சார்பு நிலையை நிறுத்திவிட போவதில்லை. இது ஒரு திருடன் போலிஸ் விளையாட்டு மாதிரி, இப்போதைக்கு நிக்காது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் நடப்பது போல தான். ஆனால் முதல் முறையாக எல்லை தாண்டி அடித்துவிட்டு வந்திருக்கிறோம், இது தொடரவேண்டும். வலுவான அரசியல் தலைமை இஸ்ரேலின் மொசாட் போல ஒரு உளவு அமைப்பை உருவாக்கி பதிலடி கொடுத்துக்கொன்டே இருக்க வேண்டும். ஜே மோடி ,ஜே இந்திய ராணுவம்.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
27-பிப்-201900:59:24 IST Report Abuse
Mithun இந்திய நாட்டின் மானத்தையும், மரியாதையையும் காப்பாற்றிய நம் விமானப்படை வீரர்களுக்கும், நம் நாட்டின் நிரந்தர பிரதமர் மோடிஜிக்கும் ஒரு பிக் சலூட்... தாக்குதல் விடியோவில் பயங்கரவாதிகள் நம் விமானப்படையை கண்டு தலை தெறிக்க ஓடியது. பயங்கரவாதிகளுக்கே பயம் காட்டியது நம் படை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X