புதுடில்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பதிலடியாக இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 வகை போர் விமானங்கள், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது, இன்று காலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின், இந்தியா அளித்த பதிலடியில் பயங்கரவாதிகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.

இந்நிலையில், பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளது. 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிஷ் இ பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், பாலகோட், முசாபர்பாத், சக்கோட்டி பகுதிகளில் நடந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE