பார்லி.,யில் இம்ரான்கானுக்கு எதிர்ப்பு

Updated : பிப் 26, 2019 | Added : பிப் 26, 2019 | கருத்துகள் (52)
Advertisement
Balakot, surgicalstrike2, indianairforce, IndiaStrikesBack, airstrike, Mirage 2000,Pakisthan,பாகிஸ்தான்
IAF  Jets, Muzaffarabad, Line of Control

இஸ்லாமாபாத்: இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில் பாக்., பார்லி.,யில் இம்ரான்கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்க கூடாது என எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர்.

பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தனது ஜப்பான் பயணத்தை ரத்து செய்தார். தொடர்ந்து, அவர் சீன வெளியுறவு அமைச்சகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாக்குதல் குறித்து எடுத்து கூறினார்.






தாக்குதல் தொடர்பாக குரேஷி கூறுகையில், இது போன்ற தாக்குதலில், இந்தியா ஈடுபட போகிறது என நாங்கள் உலக நாடுகளிடம் சொல்லி வந்துள்ளோம். இன்று இந்தியா தாக்குதலில் ஈடுபட்டது. இது விதிகளை மீறிய செயல். இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர ஆலோசனை நடத்தினார்.


மறுப்பு

பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், முசாபர்பாத் பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் ஊடுருவின. இதற்கு பாகிஸ்தான் விமானப்படை பதிலடி கொடுத்தன. இதனால், அங்கிருந்து இந்திய விமானங்கள் கிளம்பி சென்ற போது குண்டுகளை வீசின. இதில் பாதிப்பு ஏதும் இல்லை எனக்கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.








Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
27-பிப்-201916:14:35 IST Report Abuse
Sathish இவன் சீனாவிடம் மட்டுமே தஞ்சம் போகமுடியும். அரபியர்கள் ஆதரித்தாலும், வட கொரியாவின் கிம் ஜோங் உணினும் போனால் போகிறதென்று ஆதரிப்பான். அப்படி ஆதரிக்கும் நிலை வந்தால் அதற்காக காத்திருக்கும் அமெரிக்கா தன் அதிரடியை அவர்கள் மேல் துவக்கும். மூன்றாம் உலகப்போர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். பாகிஸ்தான் அதற்குத்தான் ஆசைப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Ramaswami Sampath - mumbai,இந்தியா
27-பிப்-201910:37:16 IST Report Abuse
Ramaswami Sampath இந்தியா குண்டு போட்ட இடத்தில் தீவிரவாதிகள் இருந்தார்களா? அல்லது முன்னாலேயே இடத்தை காலி பண்ணி விட்டு ஓடிவிட்டார்களா என்பது தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
26-பிப்-201922:31:20 IST Report Abuse
SENTHIL தரைப்படையை சீண்டினால் விமானப்படை குண்டு மழைபொழியும் . இனிமேலாவது இல்லாத வாலைசுருட்டிக்கொண்டு பிள்ளை குட்டிகளை படிக்கவைத்து முன்னேற பாருங்கடா கூறுகெட்ட பக்கிகளா. இங்க இருப்பது இரும்பு பிரதமர் மோதி. எங்கள் மீது மோதினால் சேதம் உங்களுக்குத்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X