பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானையே தாக்கியது இந்தியா?

Updated : பிப் 26, 2019 | Added : பிப் 26, 2019 | கருத்துகள் (51)
Advertisement

புதுடில்லி: பயங்கரவாதிகள் மீது இன்று (பிப்.26) பாக்., எல்லைக்கோடு அருகே மட்டுமல்லாது, பல ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக அந்நாட்டிற்கு பல கி.மீ., துாரம் ஊடுருவி, அங்கிருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீதும் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி உள்ளது. அதாவது, கிட்டத்தட்ட பாகிஸ்தானையே இந்தியா தாக்கி உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


முதலில் வந்த தகவல்


முதலில் வந்த தகவல்களின்படி, பாக்., எல்லையோரம் உள்ள சகோடி, முசாபராபாத் பகுதிகளில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது.ஆனால் அடுத்தடுத்து வரும் தகவல்களின்படி, பாக்.,கின் உள்ளே பல கி.மீ., துாரத்தில் அமைந்துள்ள பாலகோட் என்ற பகுதியையும் நமது விமானப்படை தாக்கி உள்ளது. இதன் மூலம், பாக்., ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மட்டுமல்லாது, பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள பகுதிகளையும் இந்தியா தாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது.








எங்கு இருக்கிறது பாலகோட்?


பாக்.,கில் கைபர் - புக்துன்குவா மாகாணத்தில் உள்ள மன்சேரா மாவட்டத்தில் அமைந்துள்ளது பாலகோட். இங்கு பயங்கரவாதிகள் பயிற்சி முகாம்கள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது. இங்கிருந்து தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இயங்கி வந்தது. 1971 போருக்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் நாட்டுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது. இன்றைய தாக்குதல் அதிகாலை 3.30 மணிக்கு துவங்கி 19 நிமிடங்களில் முடிந்துள்ளது. பல மிராஜ் விமானங்கள் ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை பயங்கரவாத முகாம்கள் மீது வீசி உள்ளன. 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின் போது கூட, பாகிஸ்தானின் உள்ளே சென்று இந்தியா தாக்குதல் நடத்தவில்லை.இன்னொரு நாட்டின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டதும் ஒரு போர் என்றே நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.






புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கப்படும் என ஏற்கனவே பிரதமர் மோடி சூளுரைத்திருந்தார். ஆனால், பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என மோடி அப்போது குறிப்பிடவில்லை. அப்படி அவர் முன்பே சொல்லி இருந்தால், அது முழுமையான போருக்கு வழி வகுத்துவிடும்.


சர்ஜிகல் ஸ்டிரைக்கில் இருந்து வித்தியாசம்


உரி தாக்குதலுக்கு பழி வாங்குவதற்காக ஏற்கனவே செப்.29, 2016ல் எல்லைக் கோட்டு பகுதியில் செயல்பட்ட 7 பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படைகள் அழித்தன.இன்று நடந்தது சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை விட பெரிய தாக்குதல். சர்ஜிகல் ஸ்ட்ரைக்கில் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இன்றைய தாக்குதலில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது பெரிய, பெரிய குண்டுகள் வீசப்பட்டுள்ளன.


இந்தியாவின் துணிச்சல்


இந்தியா தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்த்து ஏற்கனவே பாகிஸ்தான் முழு கண்காணிப்புடன் இருந்தது. அதையும் மீறி இந்தியா தாக்குதல் நடத்தி உள்ளது.இதன் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா முக்கியமான ஒரு செய்தியை சொல்லி உள்ளது. ‛‛நீ என்னதான் கண்காணிப்புடன் இருந்தாலும், உனது நாட்டுக்குள்ளேயே புகுந்து தாக்குதல் நடத்தும் திறமையும் தைரியமும் எங்களுக்கு இருக்கிறது'' என்பதே அந்த செய்தி.

தாக்குதல் நடந்தபோது, ஏதாவது ஒரு இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தி இருந்தால் கூட அது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கும்.
‛புல்வாமா தாக்குதலுக்காக இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பதிலடி தரும்'' என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறி இருந்தார். அந்த எச்சரிக்கையை துாக்கி துாரப்போட்டுவிட்டு, பாகிஸ்தானை பதம் பார்த்துள்ளது இந்தியா.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Oru Indiyan - Chennai,இந்தியா
26-பிப்-201921:14:35 IST Report Abuse
Oru Indiyan What Did Vaiko and Thirumurugan Gandhi said about this strike. ?
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
26-பிப்-201921:06:30 IST Report Abuse
Siva வாழ்க பாரதம்... வாழ்க மோடி ஜி...
Rate this:
Share this comment
Cancel
sriram - chennai,இந்தியா
26-பிப்-201920:54:11 IST Report Abuse
sriram இனிமேதான் இந்தியா மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும்..இந்த பாக் இம்சையானது ....எப்போது எப்படி எதை தாக்க வேண்டும் என்று யோசிக்காமல் தாக்க முயற்சிக்கும் எனவே பாகிஸ்தானை கட்டுக்குள் வைக்க நாம் எப்பொழுதும் விழிப்போடு இருதல் அவசியம்.. என்னை பொறுத்தவரை பாகிஸ்தானை நான்கு கூறுகளாக பிரிக்க வேண்டும் பலுசிஸ்தானை தனி நாடக அறிவிக்க வேண்டும் அப்பொழுது தான் தீவிரவாதிகளின் கோட்டம் அடங்கும் மற்றும் பாகிஸ்தான் என்ற நாடு சுருங்கி நம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X