பாக்.,க்கு அமெரிக்கா நெருக்கடி

Updated : பிப் 27, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (14)
Advertisement

வாஷிங்டன் : பயங்கரவாத அமைப்புக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.





எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமானப்படை, பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்திய தாக்குதலை அடுத்து பாக்.,ல் பயங்கரவாத அமைப்புக்கள் செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாக்.,க்கு அமெரிக்கா எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், பயங்கரவாத அமைப்புக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளை ஒடுக்க தேவையான நடவடிக்கைகளை பாக்., மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கைகளை தவிர்க்க பயங்கரவாத அமைப்புக்கள் மீது பாக்., நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷியை தொலைப்பேசியில் அழைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசி உள்ளார்.




புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாக்., இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளுடனும் அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலை அடுத்து, பாக்.,க்குஅமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாக்., மீதான உலக நாடுகளின் அழுத்தமும், நெருக்கடியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-பிப்-201912:57:22 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ரபேல் விமானம் வரட்டும் நாமே இன்னொரு மிஷன் செய்யலாம். ஒட்டுமொத்தமாக அழிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
27-பிப்-201910:59:13 IST Report Abuse
Nalam Virumbi பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க தவறினால், பல் நாட்டு கூட்டு கொண்டு நடவடிக்கை எடுக்கப் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-பிப்-201910:56:27 IST Report Abuse
Nallavan Nallavan இந்தியாவைச் சமாளிக்க ........ பைட்டர் பிளேன் வாங்கிக்குங்க
Rate this:
Share this comment
27-பிப்-201912:56:12 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்வாங்க பணம் இல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X