பொது செய்தி

இந்தியா

தாக்குதலுக்கு அனுமதி அளிக்காத காங்., அரசு

Updated : பிப் 28, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (123)
Advertisement

புதுடில்லி : மும்பைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப் படை தயாராக இருந்தது என்றும் , அப்போதைய அரசு (காங்.,) அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் முன்னாள் விமானப் படை தளபதி பாலி ஹோமி தெரிவித்துள்ளார்.





ஒரு ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் விமானப்படை முன்னாள் தளபதி பாலி ஹோமி கூறியதாவது:மும்பை தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு முப்படை தளபதிகளை தனது வீட்டுக்கு அழைத்தார் அப்போதைய பிரதமர் (மன்மோகன்சிங்). எங்களுடன் பாதுகாப்பு துறை செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் அழைக்கப்பட்டோம்.
மும்பை தாக்குதலுக்கு பதிலடியாக என்னவெல்லாம் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என ஆலோசித்தோம். அது ஆரம்ப கட்டம் என்பதால், பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினோம். எங்கு இருந்து தாக்குவது, என்னென்ன ஆயுதங்கள் தேவை, தொடர்ந்து போர் வந்தால் என்ன செய்வது, அதற்கு ஏற்ற ஏற்பாடுகள் என்ன போன்ற விஷயங்களை பேசினோம்.




பின் அரசின் ஒப்புதலுக்காக காத்திருந்தோம். என்ன காரணத்தாலோ ஒப்புதல் வரவில்லை. இப்போதைய அரசு தைரியமாக முடிவு எடுத்து செயல்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
28-பிப்-201910:21:49 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பழங்கதையே பேசி காலம் தள்ளறதுக்குனு ஒரு கட்சி, ஆட்சி...........................
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
28-பிப்-201915:17:45 IST Report Abuse
Chowkidar NandaIndiaநேரு முதல் மவுனகுரு வரை எந்த ஒரு ஆணியும் பிடுங்காமல் முடிந்தவரை நாட்டை சீரழித்துவிட்டு சென்று விட்டார்கள். இதில் இவர்கள் ஜால்றா கும்பலுக்கு பெருமை வேறு. ஜால்றா தட்டி அடிவருடிகள் ஆனந்தப்படுவது காலக்கொடுமை....
Rate this:
Share this comment
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
28-பிப்-201909:29:01 IST Report Abuse
Shroog இந்தியாவின் economy கீழே விழுந்து கிடைக்கிறது. ஒரு US டாலர் இப்போ 72 ருபாய். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பண மதிப்பு மிக அதிகம். போரினால் எதுவும் சாதிக்க முடியாது. பாகிஸ்தானும் நல்ல ராணுவத்தை கொண்டுள்ளது. போர் என்று வந்தால், இம்ரான்கான் சொன்னது போல், இரு நாட்டு பிரதமர்கள் கட்டுப்பாட்டில் போர் இருக்காது. அதை புரிந்து செயல்பட்டது காங்கிரஸ்
Rate this:
Share this comment
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
28-பிப்-201913:19:22 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய்கான்களின் புத்தியை என்னவென்று சொல்வது........
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
28-பிப்-201915:23:52 IST Report Abuse
Chowkidar NandaIndiaகான்க்ராஸ் காலத்து பணமதிப்பு மிக அதிகம்னா ஒரு ஐநூறோ ஆயிரமோ இருக்குமா? அட அறிவாளியே. 2014 இல் ஆட்சி மாறியபோது ரூபாயின் மதிப்பு என்ன என்று பார். அதோடு அப்போது விலைவாசி எப்படியிருந்தது என்றும் பார். மவுனகுரு ஆட்சியில் சாமானியன் முதல் சந்நியாசி வரை விண்ணை முட்டி நின்ற விலைவாசியால் வயிற்றில் ஈரத்துணி கட்டிக்கொண்டு அலைந்தது அதற்குள் மறந்து விட்டதா? கான்க்ராஸ் கட்சியின் கையாலாகாதனத்திற்கு இப்படியும் ஒரு சப்பைக்கட்டு....
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
28-பிப்-201908:05:51 IST Report Abuse
svs யுத்தம் , அழிப்போம் , தாக்குவோம் என்ற கூவிய மோடி சொம்புகள் இன்று காங்கிரஸ் தான் காரணம் என்று திருப்பி போடுது .....இதெல்லாம் தெரியாமல் தான் ஐந்து வருடம் நாட்டை ஆண்டர்களா ??.....கூவும்போது இதெல்லாம் தெரியாதா??....நாடு அவமானப்பட்டு நிக்குது என்று பலர் கருத்து எழுதுகிறார்கள் .....
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
02-மார்-201913:55:29 IST Report Abuse
Sathya Dhara .......ஒப்பாரி உளறல் எல்லாம் ....மோதியின் வளர்ச்சி கண்டு.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X