பொது செய்தி

இந்தியா

எதிர்க்கட்சிகளை இளைஞர்கள் கேள்வி கேட்கணும்: மோடி

Updated : பிப் 27, 2019 | Added : பிப் 27, 2019 | கருத்துகள் (25)
Advertisement

புதுடில்லி : ராஜ்யசபா மிக குறைவாக செயல்பட காரணமாக இருந்த எதிர்க்கட்சிகளை இளைஞர்கள் கேள்வி கேட்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.





டில்லியில் நடந்த தேசிய இளைஞர் பார்லி., விழாவை துவக்கி வைத்த மோடி, விழாவில் சிறப்பாக பேசிய 3 பேருக்கு விருதுகளை வழங்கினார். முதல் பரிசாக ரூ.2 லட்சமும், 2வது பரிசாக ரூ.1.50 லட்சமும், 3 வது பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. 50,000 இளைஞர்கள் பங்கேற்ற இவ்விழாவில் மற்ற 53 பேச்சாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக விழாவை சீக்கிரம் முடித்துக் கொண்டு, அவசர ஆலோசனையில் பங்கேற்க பிரதமர் புறப்பட்டு சென்றார்.




விழாவில் பேசிய மோடி, தற்போது என் முன் இந்தியா புதிய வடிவம் பெற்றுள்ளது. நாம் பேசும் வார்த்தைகள் ஈர்க்கும் வகையில் இருப்பதை விட, ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும். 16 வது லோக்சபா சராசரியாக 85 சதவீதம் செயல்பட்டு, சுமார் 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 15வது லோக்சபாவுடன் ஒப்பிடுகையில், 16 வது லோக்சபா 20 சதவீதம் கூடுதலாக செயலாற்றி உள்ளது. ஆனால் ராஜ்யசபா வெறும் 8 சதவீதம் மட்டுமே செயல்பட்டுள்ளது.




ராஜ்யசபா இவ்வளவு குறைவாக செயல்பட்டது ஏன் என எதிர்க்கட்சி தலைவர்களை இளைஞர்கள் கேள்வி கேட்க வேண்டும். மத்திய அரசுக்கு பெரும்பான்மை உள்ள லோக்சபாவில் 85 சதவீதம் செயல்பாடு இருந்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதிகம் உள்ள ராஜ்யசபாவின் செயல்பாடு மோசமாக இருந்துள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
27-பிப்-201920:51:38 IST Report Abuse
தோலுரிப்பவன் என்ன வென்று இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கே ஏன் பாதுகாப்பு இல்லை என்றா மஸ்தான் கேட்கணும் இல்லை அவன் போட்டாவை வைத்து ஏன் பிரச்சாரம் செய்தீர்கள் என்றா கேட்கணும் எதை கேட்கணும் வேலை இல்லா திண்டாட்டம் உள்ளதே அதை கேட்கணுமா என்ன
Rate this:
Share this comment
Cancel
N.Murugan - Nagercoil,இந்தியா
27-பிப்-201919:43:04 IST Report Abuse
N.Murugan வாயால் வடை சுட முடியாது நீங்கள் கொடுத்த வேலை வாய்ப்பு வாக்குறுதி என்ன ஆனது முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
27-பிப்-201918:51:12 IST Report Abuse
Rpalnivelu ஆயிரம் திருட்டு குடும்ப வாரிசுக் கட்சிகள் வந்தாலும், மோடியின் நல்லாட்சி மறைவதில்லை ஊழல், ஊழல் என்று மலை முழுங்கி ஊழல்வாதிகள் பிதற்றி திரிந்தாலும் மோடியின் அலை ஓய்வதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X