பதிவு செய்த நாள் :
ராஜ்யசபா எம்.பி.,க்களிடம் கேள்வி கேளுங்கள்:
இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி:''ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக் கள் நிறைவேறாதது ஏன் என, அதில் அங்கம் வகிக்கும், எம்.பி.,க்களிடம், இளைஞர்கள் கேள்வி கேட்க வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார். டில்லியில், 'தேசிய இளையோர் பார்லிமென்ட் விழா - 2019' என்ற நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: பெரும் பான்மையுள்ள அரசை, மக்கள் தேர்வு செய்த தால், 16வது லோக்சபாவில், 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன;


இது, ,15வது லோக்சபா வைவிட, 20 சதவீதம் அதிகம். ராஜ்ய சபாவில், அரசை விட,

மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. குறிப்பாக, பார்லி., கடைசி கூட்டத்தொடரின் போது, ராஜ்யசபாவில், 8 சதவீத பணிகள் மட்டுமே நடந்தன. அரசின் வளர்ச்சி திட்டங்களை தடுக்கும் நோக்கில் தான் ராஜ்ய சபாவில் மசோதாக்களை நிறைவேற்ற விடாமல், எதிர்கட்சிகள் தடுக்கின்றன.

இளைஞர்கள் தங்கள் ஊர்களில், நிகழ்ச்சி ஏற்பாடு செய்து. அதில், தங்கள் பகுதியைச் சேர்ந்த, ராஜ்ய சபா, எம்.பி.,க்களை பங்கேற்க வைக்க வேண்டும். அப்போது, ராஜ்யசபாவில் மசோதாக்கள் நிறை வேறாமல் இருப்பது குறித்து, அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.டில்லியில் புதிதாக அமைக்க பட்டு உள்ள, தேசிய போர் நினைவு சின்னத்தை, அனைவரும் பார்க்க வேண்டும். அப்போது,

Advertisement

தேசத்துக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
இன்றைய இளைஞர்கள், மிகவும் திறமை சாலிகளாக, சிந்தனை சிற்பிகளாக உள்ளனர். இளைஞர்களின் எண்ணங்கள், கனவுகளை நனவாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.புற்றுநோய் போல் பரவிஉள்ள ஊழலை ஒழிக்க, மத்திய அரசு, பல கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; இதற்கு மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது.
அதனால் தான், சுதந்திரம் அடைந்து, 70 ஆண்டு களுக்கு பின், நாட்டில் வருமான வரி செலுத்து வோர் எண்ணிக்கை, இரு மடங்காக உயர்ந்து உள்ளது.இளைஞர்கள்,தங்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருப் பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தலில் கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-பிப்-201919:13:10 IST Report Abuse

தமிழ்வேல் அதுபோல நிருபர்களும் கேள்வி கேட்கலாமா ஜீஜி ?

Rate this:
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-பிப்-201917:55:44 IST Report Abuse

S.Baliah Seerமழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்து விடின்.... அதுபோல் கூழைக் கும்பிடும் உலகத்தால் பழிக்கப்படுவது தான்.

Rate this:
murugu - paris,பிரான்ஸ்
28-பிப்-201913:48:15 IST Report Abuse

muruguM P களிடம் கேள்வி கேட்பது இருக்கட்டும் ,உங்களிடம் கேள்வி கேட்பதற்காக இந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ?

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
28-பிப்-201915:30:09 IST Report Abuse

வல்வில் ஓரி சரி..கேளேன்.....

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X