பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஜி.எஸ்.டி.,யில் ரூ.20,000 கோடி மோசடி கண்டுபிடிப்பு
முறைகேடுகள் நடப்பதை தடுக்க வரி துறை தீவிரம்

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், ஜி.எஸ்.டி., யில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மோசடி தடுப்பு நடவடிக்கைகளை, வரித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

 ஜி.எஸ்.டி.,யில், ரூ.20,000 கோடி, மோசடி,கண்டுபிடிப்பு  முறைகேடுகள்,நடப்பதை,தடுக்க,வரித்துறை,தீவிரம்

இது குறித்து, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி புலனாய்வு பிரிவு உறுப்பினர், ஜான் ஜோசப் கூறியதாவது:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரியில், நடப்பு, 2018 - -19ம் நிதியாண்டில், இதுவரை, 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்று உள்ளதை, வரித் துறை அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர்.

அதில், வரி ஏய்ப்பு செய்த நிறுவனங்களிடம் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் திரும்பப்
பெறப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம், ரூ.1,500 கோடி மதிப் பிலான பொருட்களை விற்பனை செய்தது போல, போலி ரசீது தயாரித்து, அதன் மூலம், உள்ளீட்டு வரியாக, 75 கோடி ரூபாய் பெற்று மோசடி செய் தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ரூ.25 கோடி

மீட்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் துறையில், பெரும்பான்மையான நிறுவனங்கள், நேர்மையாக, ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்கின்றன. 5 - 10 சதவீத நிறுவனங்கள் தான், மோசடியில் ஈடுபடுகின்றன.மத்திய அரசு, வரி ஏய்ப்பாளர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளது.அதேசமயம், நேர்மையாக வரி செலுத்துவோர் பாதிக்கப்படக் கூடாது என்பதும் கவனத்தில் கொள்ளப்படும்.

ஜி.எஸ்.டி., நடைமுறையை அனைவருக்கும் ஏற்ற தாக, இணக்கமாக மாற்றும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த, 2017, ஜூலை, 1ல் அறிமுகமான, ஜி.எஸ்.டி.,யில், இதுவரை, 1.20 கோடி நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.நம் நாட்டில், ஜி.எஸ்.டி., 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு விதமாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு, பூஜ்ய வரி விதிப்பு உள்ளது.

பல நாடுகளில், ஒரே ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது. இந்தியாவில் அதுபோல அமல்படுத்த முடியாது. இங்கு, மிகப் பெரும் பணக்காரர்களும், பரம ஏழைகளும் உள்ளனர்.பணக்காரர்களை கருத்தில் இருத்தி, வரி விதித்தால், அது ஏழைகளை பாதிக்கும். அதனால், ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை, ஒரே சதவீதமாக அமல்படுத்துவதுகடினம்.

அதேசமயம், தற்போது உள்ளவற்றை சுருக்கி, வருங்காலத்தில், இரண்டு அல்லது மூன்று வரி விதிப்புகள் அமலுக்கு வரலாம். இது குறித்து,

Advertisement

ஜி.எஸ்.டி., கவுன்சில் தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கட்டுமானத்தில் உள்ள வீடுகளுக்கான, ஜி.எஸ்.டி., 12 -ல் இருந்து, 5 சதவீதமாக, தற் போது குறைக்கப்பட்டுள்ளது. அது போல, குறைந்த விலை வீடுகளுக்கு, 8 ல் இருந்து, 1 சதவீதமாக, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இதுவரை, கட்டுமான நிறுவனங்கள் பெற்ற, உள்ளீட்டு வரி பயன், இனி கிடைக்காது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு, விற்பனையா காமல் உள்ள வீடுகளுக்கு, உள்ளீட்டு வரி பயன் தரவேண்டும் என, கட்டுமான நிறு வனங்கள் கோருகின்றன. இதை, சம்பந்தப் பட்ட நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தான் பரிசீலிக்க வேண்டும்.எனினும், ஜி.எஸ். டி., குறைக்க பட்ட பின்,உருவாகியுள்ள சூழலுக்கு தீர்வு காண, விரைவில்,ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன், வரித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஜான் ஜோசப், உறுப்பினர்,மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி புலனாய்வு பிரிவு


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-பிப்-201922:32:02 IST Report Abuse

Pugazh V"? ஜி எஸ் டியை தாமதப்படுத்தினால் கறுப்புப்பண உற்பத்தியும் அதிவேகமெடுத்திருக்கும் என்பதே உண்மை இன்று பசி போன்றவர்கள் ஜி எஸ் டியை எதிர்பதற்கு காரணமும் அதுவே"/ இதே காரணத்துக்காகத் தான், பத்து வருடங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி யை மோடி, வெறித்தனமாக எதிர்த்தார்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-பிப்-201915:02:25 IST Report Abuse

Pugazh Vஹா ஹா ஹா. பாஜக வின் எல்லா நடவடிக்கைகள் எல்லாமே மக்கள் விரோத சட்டங்கள். ஆனால் இதெல்லாம் நாட்டு க்கு நன்மை என்று பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருவது தெரிகின்றது.

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-பிப்-201913:41:39 IST Report Abuse

ஆரூர் ரங்முன்னர் வணிக வரி உற்பத்தி வரி என பலவரிகள் இருந்தபோது இதனைவிட பன்மடங்கு அதிக வரிஏய்ப்புகளும் தில்லுமுல்லுகளும்நடந்ததன இப்போது கணினிமூலமே எல்லாமென ஆனபிறகும் பழைய நினைப்பில் ஏமாற்றப்போய் மாட்டிக்கொண்டுள்ளனர் .ஜி எஸ் டியால் வரி தேவைகளுக்காக கோர்ட்டுக்குப்போகும் வாய்ப்பு குறைவு Ramanujam Veraswamy - போன்றவர்கள் அரைகுறை ஞானத்துடன் குறை கண்டுபிடிப்பது எதிர்பார்த்ததுதான் (REVENUE NEUTRAL என்றால் என்ன தெரியுமா?) முன்னர் வசூலாகியதைவிட அதிகம் வசூலாகிறது என எல்லா மாநிலங்களும் கூறியதால்தான் பிந்தைய வரிக்குறைப்புக்கு வழி உருவானது . .எல்லா மாநிலங்களும் அடங்கிய ஜி எஸ் டி கவுன்ஸில்தான் ஜி எஸ் டி விதி வகைகளை உருவாக்கியது .ஆளும்கட்சி மட்டும் முடிவெடுக்கவில்லை அதில் எல்லாக் கட்சிகளும் அடக்கம் .ஒரேயொரு மாநிலம் எதிர்த்து வாக்களித்திருந்தாலும் ஜி எஸ் டி விதிகள் நிறைவேறியிருக்காது . ஜி எஸ் டி பற்றிய விவாதங்கள் நாட்டில் தொடங்கி பத்நாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இதனையும் இன்னும் இழுத்தடித்து சாகடிப்பதுதான் உங்களாது ஆசையா வீராசாமி ? ஜி எஸ் டியை தாமதப்படுத்தினால் கறுப்புப்பண உற்பத்தியும் அதிவேகமெடுத்திருக்கும் என்பதே உண்மை இன்று பசி போன்றவர்கள் ஜி எஸ் டியை எதிர்பதற்கு காரணமும் அதுவே

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X