அரசியல் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் ஜெ., சிலை அ.ம.மு.க.,வினர் அதிரடி

Added : பிப் 27, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 நள்ளிரவில் ஜெ., சிலை   அ.ம.மு.க.,வினர் அதிரடி

தஞ்சாவூர், கும்பகோணத்தில், அ.ம.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., சிலை அருகே, ஜெயலலிதாவுக்கு நள்ளிரவில், சிலை வைக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர், கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் வடக்கு, கிழக்கு வீதி சந்திப்பில், ஏற்கனவே, எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், எம்.ஜி.ஆர்., சிலை அருகிலேயே, நேற்று முன்தினம் நள்ளிரவு, ஜெயலலிதாவின் மார்பளவு சிமென்ட் சிலையை, திடீரென சிலர் அமைத்துள்ளனர்.இது குறித்து, அ.ம.மு.க., நகர செயலர், குருமூர்த்தி கூறியதாவது:ஜெயலலிதாவுக்கு சிலை வைக்கப்பட்டது தொடர்பாக, போலீசார் விசாரித்தனர். 'உடனடியாக சிலையை அகற்ற வேண்டும்' என்றனர். அதற்கு, தமிழ்நாடு முழுவதும், இதுபோல் ஜெயலலிதாவின் சிலைகள், அனுமதி பெறாமல் தான் வைக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளை அகற்றுங்கள்; நாங்களும் எடுக்கிறோம் எனக் கூறிவிட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
02-மார்-201916:43:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> எம்ஜி ஆர் ஜெயபோலவே இல்லீங்க ஜெயவைப்பார்த்தால் வளர்மதி போலவேதான் இருக்கு ஜெயாவின் கம்பீரமான அழகு எங்கே இந்தசிலைபார்த்தால் பாதி சசிகலா மீதி வளர்மதி போலவே இருக்கே இன்னம் கரெக்ட்டா சொல்லணுனா சி ஆர் சரஸ்வதிபோலவும் இருக்கு எம் ஜீ ஆர் மீது எண்ணையாகோவும் இவ்ளோகேவலமா இருக்கு அவரின் சிலை பாவம்
Rate this:
Share this comment
Cancel
Hari Iyer - Austin,இந்தியா
02-மார்-201903:12:08 IST Report Abuse
Hari Iyer அது ஜெயாவின் பாட்டி சிலையாக இருக்கலாம். சத்தியமா அது ஜெயாவின் முகம் இல்லை. தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்ற தினா போடும் நாடகம். சசிகலா குடும்பத்திற்கு சந்தியா குடும்பத்தின் மீது எப்படி பாசம் வரும்?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
01-மார்-201906:01:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அசப்பில் பார்த்தா சசிகலா மாதிரி இருக்கு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X