பதிவு செய்த நாள் :
விமானப்படை தாக்குதல் குறித்து சர்ச்சை பேச்சு
கேரள மார்க்.,செயலாளருக்கு வலுக்கிறது எதிர்ப்பு

மூணாறு:''லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் முன் போரைதுாண்டி,தேர்தல் நடவடிக் கையை திசை திருப்புவதற்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ். எஸ்.,சின் துாண்டுதலின் படி பாகிஸ் தானில், இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியது, ''என கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 விமானப்படை,தாக்குதல்,குறித்து,சர்ச்சை பேச்சு,கேரள,மார்க்சிஸ்ட் செயலாளருக்கு,வலுக்கிறது,எதிர்ப்பு

அவரை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டுமென பா.ஜ., வலியுறுத்தியுள்ளது.

கோடியேரி பாலகிருஷ்ணன், கேரளா பாதுகாப்பு பயணம் என்ற பெயரில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.இடுக்கி மாவட்டத்தில் சுற்று பயணத்தில் அவர்பேசியதாவது:

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கும் முன் போரை துாண்டி தேர்தல் நடவடிக்கையை திசை திருப்பு வதற்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., சின் துாண்டு தலின் பேரில், பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியது. முஸ்லிம் விரோதத்தை ஏற்படுத்தி, மதவாதத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக் கிறது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் அப் பிரச்னையை துாண்டி விட்டு எதிரிகளாக்கும் வகையில் செயல்படுகிறது.


தேர்தல் நெருங்கும் நிலையில் தோல்வி பயத்தை உணர்ந்த பா.ஜ., அரசு, நாட்டைப்போர் முனையில் நிறுத்த முயற்சிக்கிறது, என்றார்.பாகிஸ்தானின்,

Advertisement

பயங்கரவாதிகளின்முகாமில் துல்லிய தாக்குதல் நடத்திய இந்திய விமானபடையின் செயலை அனைவரும் பாராட்டி வரும் நிலை யில், இவரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என, பா.ஜ., தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ண தாஸ் வலியுறுத்தி உள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
28-பிப்-201920:57:27 IST Report Abuse

Swaminathan Chandramouliதேச துரோகியாக அறிவித்து உடனே கைது செய்து இருபது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கவேண்டும் . இன்னும் இது போல பல தேசத்துரோகிகள் இந்திய தாக்குதலை கொச்சை படுத்தி அசிங்கமாக பேசிவருகிறார்கள் . பினராயிவிஜயனையும் கைது செய்யவேண்டும்

Rate this:
D.RAMIAH - RAIPUR,இந்தியா
28-பிப்-201919:21:43 IST Report Abuse

D.RAMIAHஇந்த ஆளை நம் தேசத்து எல்லைக்கு அனுப்பவும். அதுதான் நமக்கு நல்லது இவன் எதற்கும் லாயக்கு இல்.ஐ இவனை அரேபிய பெருங்கடலில் தூக்கி எரிய வேண்டும்

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
28-பிப்-201918:59:16 IST Report Abuse

S.Ganesanஇவனுக கொள்கையே இறக்குமதி செய்யப்பட்டது தானே. இவனுகளுக்கு இந்தியாவை பற்றி என்ன கவலை. இது போன்றவர்களை தேச துரோக குற்றத்தின் கீழ் சிறையில் தள்ள வேண்டும்.

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X