அபிநந்தன் நாளை விடுதலை: இம்ரான்

Updated : பிப் 28, 2019 | Added : பிப் 28, 2019 | கருத்துகள் (96)
Advertisement
Imran Khan,Pakistan,இம்ரான், அபிநந்தன்,

இஸ்லாமாபாத்: இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை(மார்ச்.,1) விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படையை சேர்ந்த, விமானி அபிநந்தன் பிடிபட்டுள்ளதாக, பாக்., ராணுவம் தெரிவித்தது. இது தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டது. அவரது புகைப்படம், வீடியோ வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறியது.


இந்நிலையில், பாகிஸ்தான் பார்லிமென்டில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசும் போது, இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார். அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் விடுதலை செய்யப்படுவார். அவர், உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார். இந்த நடவடிக்கையால், எங்களை பலவீனமானவர்களாக கருத வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் தற்போது ராவல்பிண்டி நகரில் அபிநந்தன் தங்கவைக்கப்பட்டுள்ளார் .நாளை அவர் லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்.பின்னர் அவர் விமானம் மூலம் டில்லி அல்லது மும்பைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அபிநந்தன் தொடர்பான, அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என சமூகவலைதளமான யுடியூப் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja -  ( Posted via: Dinamalar Android App )
01-மார்-201906:17:03 IST Report Abuse
Raja 2 days of strike. We lost 2 jets, 1 pilot and another is under dangerous. Honestly I am really affaird about our military capabilities. Whoever will form a central govt should really need to think
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
01-மார்-201902:09:48 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அபிநந்தன் நலமாக இந்திய மண்ணில் காலடி வைக்கும் வரை பொறுமை காப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
01-மார்-201901:58:37 IST Report Abuse
Pugazh V மீதமிருக்கும் மிக் விமானங்களை யாருக்கு வேணா குடுங்க நல்லவன். நிம்மி ஜி க்கு குடுத்தா அதை கால்டாக்சி மாதிரி ஓடவுட்டு காசு பாத்துருவாங்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X