பா.ஜ.,வுக்கு தலைவலியாகும் தலைவர்கள்

Updated : பிப் 28, 2019 | Added : பிப் 28, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ., கட்சிக்கு காங்கிரஸ் மட்டுமல்லாது, அக்கட்சி தலைவர்கள் சிலரே தலைவலியாக மாறி உள்ளனர்.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்கியது. இதை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என பா.ஜ., கட்சி அறிவித்திருந்தது. பிரதமர் மோடியும் இவ்விஷயத்தில் கவனமாக இருந்தார். அரசியலுக்கு பயன்படுத்தினால்

புதுடில்லி: பா.ஜ., கட்சிக்கு காங்கிரஸ் மட்டுமல்லாது, அக்கட்சி தலைவர்கள் சிலரே தலைவலியாக மாறி உள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்கியது. இதை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என பா.ஜ., கட்சி அறிவித்திருந்தது. பிரதமர் மோடியும் இவ்விஷயத்தில் கவனமாக இருந்தார். அரசியலுக்கு பயன்படுத்தினால் ராணுவத்தின் தியாகத்தை அவமானப்படுத்தியது போல் ஆகும் என மோடி கருதினார்.


பா.ஜ., தலைவர்கள்


இது புரியாமல் சில பா.ஜ., தலைவர்கள் எதையாவது பேசி, கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்துகின்றனர். கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, ‛‛பாக்., மீது விமான தாக்குதல் நடத்தியதால் வரும் தேர்தலில் பா.ஜ.,வுக்கு 22 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்'' என்றார்.



latest tamil news




இதைப் பார்த்து கடுப்பான மத்திய அமைச்சர் வி.கே.சிங், ‛‛நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். சில இடங்களை கூடுதலாக பெறுவதை விட, நாட்டை பாதுகாப்பதும் மக்களை பாதுகாப்பதும் முக்கியமானது. '' என்று டுவீட் செய்திருந்தார்.


latest tamil news




எடியூரப்பாவின் கருத்து பாகிஸ்தானுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் டெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, தனது டுவீட்டில், ‛‛இது (எடியூரப்பாவின் கருத்து) தேர்தலுக்காக இந்திய ஆளும் கட்சி, போர் சூழ்நிலையை உருவாக்குவதையே காட்டுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளது.

அதற்கு முன்னதாக பத்திரிகையாளர் பர்கா தத் தனது டுவீட்டில், ‛‛எடியூரப்பாவின் கருத்து, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கும் விமானப்படை வீரர் அபிநந்தனுக்கும் ஏற்பட்ட அவமானம்'' என்று கூறி இருந்தார்.

இது போல், ஆங்காங்கே சில உள்ளூர் தலைவர்கள், இந்திய விமானப்படை தாக்குதல் பற்றி எதையாவது பேசி, பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-மார்-201904:11:49 IST Report Abuse
J.V. Iyer பேசத்தெரியாதவர்கள் பாஜகவில் நிறைய உள்ளனர். அங்கு கருத்து சுதந்திரமும் அதிகம். கேட்கவேண்டுமா.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-மார்-201901:54:18 IST Report Abuse
Bhaskaran இம்மாதிரி அனுகூல சத்ருக்களும் வைகோ ஸ்டாலின் மாதிரியான எதையுமே எதிர்க்கவேண்டும் என்னும் எண்ணமுள்ளவர்களுமே இன்றய அரசியலில் நிறைய இருக்கின்றனர் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் பாராட்டுவதை பாராட்டவும் எதிர்க்கவேண்டியதை எதிர்க்கவும் செய்யும் யோக்கிய அரசியல்வாதிகள் தேசத்தில் மிக கம்மி
Rate this:
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
01-மார்-201901:06:51 IST Report Abuse
Kandaswamy இந்த தாக்குதலை எந்த கட்சி ஆட்சியில் இருந்து நடத்தி இருந்தாலும் பெருமையாய் மார்தட்டிக் கொள்ளத்தான் செய்யும். மக்களுக்கு தங்களின் வீர சாகசம் சென்றடையவேண்டுமே வேறு வழி???
Rate this:
Kannan Iyer - Bangalore,இந்தியா
01-மார்-201908:17:32 IST Report Abuse
Kannan Iyerநீங்கள் சொல்வது சரி. எந்த கட்சி ஆனாலும் பெருமை படைத்தான் செய்யும். நமது நாட்டு அரசியலை பற்றி சொல்லவா வேண்டும். புல்வாமா தாக்குதலை பற்றியே தாக்குதல் நடந்த நேரம் சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது என்கிறார் ஒருவர். ஆனால் இதனால் இத்தனை சீட் கிடைக்கும் என்று கணக்கு போடுவது மஹா மட்டமான அரசியல் அதுவும் இதை அரசியலாக்கக்கூடாது என்று அவர் கட்சி பிரதமர் சொல்லும் போது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X