பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
விங் கமாண்டர் அபிநந்தனின் நாட்டுப்பற்று
முக்கிய ஆவணங்கள் விழுங்கி அழிப்பு

புதுடில்லி:பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிபடுவதற்கு முன், தன்னிடம் இருந்த முக்கிய ஆவணங்கள், அவர்களிடம் சிக்கி விடாமல் இருக்க, அவற்றை வாயில் போட்டு விழுங்கிய, அபிநந்தனின் துணிச்சலான செயல், தற்போது தெரியவந்துள்ளது.

 விங் கமாண்டர், அபிநந்தனின், நாட்டுப்பற்று,முக்கிய,ஆவணங்கள் விழுங்கி,அழிப்பு

இந்திய விமானப் படையின், விங் கமாண்டர் அபிநந்தனின் சாகசம் குறித்து, பாகிஸ்தானில் இருந்து வெளியாகும், 'டான்' நாளிதழில் கூறப்பட்டுஉள்ளதாவது:இந்திய விமானத்தை, பாக், ராணுவம் சுட்டதும், அதிலிருந்து புகை வெளிவரத் துவங்கியது. அந்த விமானத்தில் இருந்த விமானி அபிநந்தன், பாராசூட் மூலம் குதித்தார்.

கல்வீச்சுமணல் மேடாக இருந்த பகுதியில், கையில் துப்பாக்கியுடன், அபிநந்தன் தரையிறங்கினார். அப்போது அங்கு, சில இளைஞர்கள் திரண்டு இருந்தனர்.தான் தரையிறங்கிய பகுதி,

'இந்தியாவா, பாகிஸ்தானா' என, அவருக்கு சந்தேகம் எழுந்தது. அங்கு நின்றிருந்த இளைஞர் களிடம், 'இந்தப் பகுதி, இந்தியாவா... பாகிஸ்தானா' என, அபிநந்தன் கேட்டார்.

அவர்கள் வேண்டுமென்றே, 'இது இந்தியா' என, பதில் அளித்தனர். இதை நம்பிய அபிநந்தன், 'பாரத் மாதா கி ஜெய்' என, கோஷமிட்டார். இந்தியாவை வாழ்த்தி அபிநந்தன் கோஷமிட்ட தால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்டனர்.அதற்கு பின்பே, தான் இறங்கிய பகுதி பாகிஸ்தான் என்பது, அபிநந்தனுக்கு தெரியவந்தது.

உடனடியாக, அங்கிருந்து தப்பி ஓடினார். பாகிஸ்தான் இளைஞர்கள், கற்களை வீசியபடியே, அவரை விரட்டிச் சென்றனர்.துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி, அபிநந்தன் ஓடினார். சிறிது துாரம் ஓடியநிலையில், அங்கிருந்த சிறு குளத்திற்குள் குதித்தார்.அடுத்த நிமிடம், தன் சட்டை மற்றும் 'பேன்ட்' பைகளில் வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் வரைபடங்களை வெளியில்எடுத்தார்.

குளத்தை நெருங்கிய இளைஞர்கள், அபிநந்தன் மீது, தொடர்ந்து கற்களை வீசினர். இதில், அவரது முகம் மற்றும் உடலில்ரத்தம் கொட்டியது.தன்னிடம் இருந்த ஆவணங்கள்,வரைபடங்களை சுக்கு நுாறாக, அபிநந்தன் கிழித்தார். அவற்றை

Advertisement

தண்ணீரில் மூழ்கடித்தார். சிலவற்றை வாயில் போட்டு விழுங்கினார். துரத்திய இளைஞர்கள், அபிநந்தனை சூழ்ந்து,சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே, அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், அந்த இளைஞர்களிட மிருந்து அபிநந்தனை மீட்டனர்.

சாகசம்ரத்தம் சொட்ட சொட்ட, அபிநந்தனை, பாக்., ராணுவத்தினர் மீட்ட வீடியோதான், சமூக வலைதளங்களில் வெளியானது.இவ்வாறு அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. உயி ருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிய போதும், முக்கிய ஆவணங்கள், பாக்., ராணுவத்தின ருக்கு கிடைத்து விடாமல், நாட்டுப்பற்றுடன் செயல்பட்ட, அபிநந்தனின் சாகசத்தை, ஒட்டு மொத்த இந்திய மக்களும் பாராட்டுகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
08-மார்-201919:19:42 IST Report Abuse

oceஎதிரிகளை தாக்க செல்லும் போது தன்னுடன் ரகசிய ஆவணங்களை எதறகாக எடுத்து செல்லவேண்டும். தேவையில்லத பிரச்சினை.

Rate this:
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
02-மார்-201911:01:15 IST Report Abuse

Ranganathan Venkata Subramanianசிங்கம் சிங்கம்தான் அபிநந்தன் வாழ்த்துக்கள்

Rate this:
Chidam - 325,இந்தியா
02-மார்-201910:07:54 IST Report Abuse

Chidamஅபிநந்தன் இந்தியாவின் அபிமானம் . . . .இம்ரான்கான் செய்தது இரு நாட்டின் ராணுவ / ஜெனிவா ஒப்பந்த அடிப்படையில்தானே அன்றி மனித நேயம் ஒன்றும் அல்ல , இந்தியாவும் அப்படித்தான் செய்திருக்கும் . . . புல்வாமா தாக்குதலுக்கு முக்கிய சூத்திரதாரர்களை இந்தியாவிடம் ஒப்படைத்திருந்தால் அதை மனிதநேயம் என்று சொல்லலாம் இது தந்திரம் . இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இம்ரான்கானை புகழும் தேச துரோகிகள் அங்கேயே சென்று விடலாம்

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X