பொது செய்தி

இந்தியா

பாலாகோட் வெற்றியும் பாக்.,கின் எதிர்காலமும்

Updated : பிப் 28, 2019 | Added : பிப் 28, 2019 | கருத்துகள் (39)
Advertisement
 பாக்.,கின் எதிர்காலம், பாலாகோட், வெற்றி

புதுடில்லி : பாக்.,கின் பாலகோட்டில் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது குறித்து ஓய்வுபெற்ற இந்திய லெப்டினன்ட் ஜெனரல் பி.ஆர்.ஷங்கர் தனது வலைப்பூ (பிளாக்) பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: சிறப்பாக துவங்கப்பட்ட பணி, பாதி நிறைவடைந்துள்ளது. ஒரு உணர்ச்சிகரமான செயல் பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா மீது வெறுப்பை உருவாக்கி உள்ளது. பகுத்தறிவு இல்லாத தன்மையை பாக்.,ராணுவம் வெளிக்காட்டி உள்ளது. மீதமுள்ள பாதி பணியை முடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.


எல்லை தாண்டி தாக்குதல் :இந்தியா எல்லை தாண்டிச் சென்று நமது மதிநுட்பத்தை காட்டும் விதமாக ராணுவம் அல்லாத ஒரு தாக்குதலை இந்தியா நடத்தி உள்ளது. பாக்., ராணுவ வீரர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, ராணுவ சொத்துகளுக்கோ சேதம் ஏற்படாமல் வெற்றிகரமாகவும், விரைவாகவும் தாக்குதலை முடித்து திரும்பி உள்ளது.


பழிக்குபழி :

இது ஆரம்பம் மட்டுமே. அவர்களின் பிரதமர் அமைதி பேச்சுக்கு அழைத்தாலும், பாக்.,ராணுவம் இனிமேல் பழிவாங்கும். இது அவர்களின் கவுரவ பிரச்னை. வழக்கமாக இந்திய எல்லைப் பகுதிக்குள் பதில் தாக்குதல் நடத்துவதே முறை. பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கப்படுவது பழக்கமாக உள்ளதால் பயங்கரவாத தாக்குதல்களை தவிர்க்க முடியாது.
எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஆயுதங்கள் குறைவாக உள்ள பக்கம் பதற்றமும், மற்றொரு புறம் பலமாகவும் இருக்கும். இருந்தாலும் எந்த நிலையிலும் சிலவற்றில் வெற்றி அடையவும், சிலவற்றில் தோல்வியடையவும் தயாராக இருக்க வேண்டும். பாக்., திடீரென கொந்தளிக்கும் சமயத்தில் நமக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படலாம்.உள்நாட்டு பிரச்னை :நமது அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தால் பாக்.,கில் உள்நாட்டு பிரச்னை இரு மடங்கு அதிகரிக்கும். பதற்றம் அதிகரித்தால் அதிலிருந்து தங்களை காப்பாற்றவில்லை என பொதுமக்கள், பாக்., அரசின் நம்பகத்தன்மையையும், திறமையையும் கேள்வி கேட்பார்கள். அது பாக்., அரசின் பலவீனத்தை வெட்ட வெளிச்சமாக்கி விடும்.

இந்திய விமானப்படையுடன் அவர்கள் படையை ஒப்பிடவே முடியாது. அமெரிக்க படைகள் பாக்.,கிற்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை அழித்த போது பாக்., ராணுவம் அதை தடுக்க முடியாமல் அமைதி காத்ததை மக்கள் ஏற்கனவே கேள்வி கேட்டுள்ளனர். தற்போது மீண்டும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது.

பாக்.,கிற்கு நெருக்கடியை அதிகரிக்கும். மற்றொரு புறம், பயங்கரவாத அமைப்புக்களும், பாதுகாப்பு கவசங்களாக அந்நாடு நினைக்கும் ஜெய்ஷ்-இ முகம்மது, லக்சர் இ தொய்பா போன்ற அமைப்புக்கள் தங்களை பாதுகாக்க தவறியதற்காக, பாக்., அரசிற்கு எதிராக மோசமான செயல்பாடுகளில் இறங்கும். கடும் நெருக்கடியால் ராணுவத்தின் அதிகாரம் வீழ்த்தப்படும்.மும்பை தாக்குதலுக்கு பிறகு பலரும் அறிந்த ஏராளமான பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் இந்தியா கட்டுப்பாட்டுடன் இருந்து வந்தது. 2016 ல் பாக்., பழிவாங்கும் நடவடிக்கையாக பயங்கரவாதத்தை அதிக அளவில் ஊக்குவித்தது.

எல்லை தாண்டிய தாக்குதல்களும் அதிகரித்தது. அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் பாக்.,க்கு எதிராக வெளிப்படையாக கண்டனத்தை தெரிவித்துள்ளன. பாக்.,கிற்கு இனியும் அவர்கள் கருணை காட்ட மாட்டார்கள். இனியும் அனைத்தும் நிறுத்தப்படவில்லை என்றால் இந்தியா செய்ததை உலகம் செய்ய நினைக்கும்.


பயங்கரவாதிகளின் புகழிடம்:

சர்வதேச நாடுகளின் கண்களில் படாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள், மலை உச்சியில் பயங்கரவாதிகளை பாக்., மறைத்து வைத்துள்ளது.

ஒசாமாவின் பதுங்கிடமாக இருந்த அபோதாபாத்திற்கு அருகிலேயே தற்போது இந்திய விமானப்படை தாக்கி அழித்த பயங்கரவாத முகாம்கள் இருந்தன. ஆனால் பயங்கரவாதத்தை கருவியாக பாக்., பயன்படுத்தி வந்ததாக சர்வதேச நாடுகள் கூறியதை பாக்., மறுத்து வந்தது. தற்போது அதன் பொய் முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சர்வதேச நாடுகள் பாக்.,கிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை கையாள வேண்டும். பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு அமெரிக்கா, ஈரான், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் ஆகியன சமரச நிலைக்கு வந்துள்ளதால் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு பாக்., உதவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. இந்தியா - ஈரான் -ஆப்கானிஸ்தான் ராஜதந்திரமாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி பாக்.,கிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பாக்.,கின் வியூகங்கள் தகர்க்கப்பட்டு வருவதால் தலிபான்களின் ஆட்டம் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒடுக்கப்பட்டுள்ளது.


நெருக்கடியில் சீனா:

தெற்கு மற்றும் வட கொரியா அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளன. ஒருவேளை இந்த உறவு உடைபட்டால் கொரிய நாடுகள் ஒன்றிணைந்தாலோ, டிரம்ப் பலத்தை காட்டினாலோ அதை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா சர்வாதிகாரியாக மீண்டும் அமரும். அது சீனாவிற்கு பிரச்னையாக முடியும்.

பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டால் பாக்., அதை மீண்டும் சீர்படுத்தவே முயற்சிக்கும். இதற்கு சீனாவின் உதவியை நாடும். அப்படி நடந்தால் சீனா எதற்காக ஆதரவு தர வேண்டும் என பாக்., மக்கள் கேள்வி கேட்பார்கள். மற்ற நட்பு நாடுகளின் அழுத்தத்துடன், சீனாவில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகளும் சேர்ந்தால் சீனா தனது ஆதரவை திடீரென குறைத்துக் கொள்ளும்.


அணு ஆயுத பயம் :

பாக்., ஒரு குண்டு போட்டால் இந்தியா 20 குண்டுகளை வீசி அழித்து விடும் என முஷாரப் ஏற்கனவே தனது அணு ஆயுத பயத்தை வெளிப்படுத்தி உள்ளார். பயங்கரவாத முகாம்களை மட்டும் மிக துல்லியமாக தாக்கி இந்தியா அழித்தது, பாக்.,கின் அணுஆயுத விரிவாக்கத்தை நிலைகுலைய வைத்துள்ளது.


பக்கபலம் இல்லாத பாக் :தற்போது பக்க பலமாக யாரும் இல்லாமல் போனது பாக்.,கிற்கு பெரிய பின்னடைவு. கார்கில் போரின் போது அமெரிக்கா, அதற்கு முன் சோவியத் யூனியன். சீனா முடக்கப்பட்டு விட்டது. சவுதி நடவடிக்கையில் இறங்க உள்ளது. ஈரான் தனது பிடியை இறுக்கி உள்ளது. தற்போது இந்தியாவிற்கு ஆதரவாகவும், பாக்.,கிற்கு எதிராகவும் அனைத்து நாடுகளும் ஐநா.,விடம் புகார் அளித்துள்ளன. இருந்தும் இது பாக்.,-ஐ தனிமைப்படுத்துவது ஆகாது.


பாக்.,கின் அடுத்த நகர்வு :

தனது பலத்தை காட்டிக் கொள்ள அணுஆயுத பலத்தை கூட்டுவதற்கான சந்தர்ப்பத்தையே பாக்., நாடும். இது குறைந்தபட்சம் நாம் கணிப்பது. இதனை இந்தியா கணிக்கக் கூடும் என்பதால் வேறு விதங்களில் தங்களை தயார்படுத்திக் கொள்ளும். பாக்.,கின் 2வது வாய்ப்பு, காஷ்மீர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும். மக்களை தூண்டிவிட்டு, கிளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், குழப்பங்களை ஏற்படுத்தவும் முயற்சிக்கும். முதலில் அமைதியாக இருந்து, பின் மெல்ல மெல்ல தங்களின் வழக்கமான வேலையை துவக்கும்.


இந்தியாவின் நிலை :நீண்ட கால பொறுமைக்கு பிறகு சிறப்பான பணியை இந்தியா துவங்கி உள்ளது. பாதியை சரியாக செய்து முடித்துள்ளது. இனி வரும் பாதை கரடுமுரடாக இருக்கும். நாம் கவனத்தை சிதற விடாமல் முழு முனைப்புடன் அழிக்க வேண்டும். பாலகோட் தாக்குதலை போன்று மற்றொரு தாக்குதலை வேறு திசையில் இருந்து நடத்த வேண்டும். அதே தீவிரத்துடன் பல முக்கிய வழிகளிலும் நெருக்கடி கொடுக்க வேண்டும். மூர்க்கத்தனம் இல்லாமல், அரசியல் ஆக்காமல், தேர்தல் அரசியலை விலக்கி சீரான தாக்குதல் நடத்த வேண்டும். விமானப்படை சிறப்பான பணியை செய்துள்ளது. விமானப்படையால் நாடு பெருமை அடைகிறது. அபிநந்தன் திரும்பி வருவார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு சல்யூட்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-மார்-201916:04:45 IST Report Abuse
நாட்டின் நண்பன். இப்போது கிடைத்த பிடியை மேலும் இறுக்கி இந்தியா தாவூத் இப்ராஹிமை பாக்கிலிருந்து நாடு கடத்தி கொண்டுவர முயற்சி எடுத்து வெற்றி பெற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
01-மார்-201910:57:27 IST Report Abuse
karthik If we accept peace now, kashmir will start violence again.Jaish soldiers will attack india. This is no piece of cake. We should demand attack any anti Indian terrorists camp in Pakistan And we should not think this one soldiers safety where as 2000 soldiers have died in pakistan war We should attack, this is the right time. When the army is ready, we should give a free hand. Otherwise they will lose the morale . What is the use of kashmir peace keeping every day stones are thrown at army. Give them free hands
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
01-மார்-201910:39:39 IST Report Abuse
RM complements sir! Salute!Simple and clear..Dinamalar thank you for this article.Lots of people can understand.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X