அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒட்டிக்கொள்ளும் ஸ்டாலின் எச்.ராஜா விமர்சனம்

Added : பிப் 28, 2019 | கருத்துகள் (12)
Advertisement
 ஒட்டிக்கொள்ளும் ஸ்டாலின் எச்.ராஜா விமர்சனம்



காரைக்குடி, : ''பிற அமைப்புகள் அறிவிக்கும் போராட்டத்தில், பின்னால் ஒட்டிக் கொள்பவராக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளார்,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.காரைக்குடியில் அவர் கூறியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சித்தாந்த ரீதியாக, தெளிவாக காய் நகர்த்தக்கூடிய தலைவராக தெரியவில்லை. தமிழகத்தில், ஜெ., மறைவுக்கு பின், ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்துள்ளன. ஏதாவது ஒன்று, தி.மு.க., தலைமை எடுத்து நடத்தியதாக வோ, அறிவித்து நடத்தியதாகவோ தெரியவில்லை.பிற அமைப்பு அறிவிக்கும்; இவர் போய் பின்னாடி சேர்ந்து கொள்வார். 'ஹிந்து சனாதன தர்மத்தை வேரறுப்போம்' என, திருமாவளவன் கூட்டத்தில் போய் பேசுவது, மதவாத பேச்சு இல்லையா?'பன்முக தன்மையை, பா.ஜ., அழிக்கிறது' எனக் கூறுபவர், 'இந்து மதத்தையே அழிப்பேன்' எனக் கூறுவது பன்முக தன்மையை அழிப்பது இல்லையா?டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருப்பது, திருமாவளவனும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான். இவர் பின்னால் உட்கார்ந்துள்ளார். கட்சியை வழி நடத்த திறமை இல்லாமல், எங்கோ சென்று கொண்டிருக்கிறார்.ஸ்டாலின், உதயநிதி, தி.மு.க.,வை ஒரு கம்பெனி போல நடத்தி வருகின்றனர். இதனால், மூத்த தலைவர்கள் வெளியேறுவர்; இல்லை, வெளியேற்றப்படுவர். அழகிரியிடம் இதுவரை பேசவில்லை. சமயம் வரும்போது பார்க்கலாம்.தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி, 30 முதல், 35 இடங்களில் வெற்றி பெறும். தே.மு.தி.க., வருவது உறுதியாகி விட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X